Monday, October 29, 2012

பொது இடங்களில் பாதுகாப்பாக இன்டர்நெட் உபயோகிப்பது எப்படி?

நாம் எப்பொழுதும் கணிபொறி மற்றும் இன்டர்நெட் உடன் இருப்பது இல்லை. நாம் வெளியில் செல்லும் பொழுது அல்லது விரைவாக எதாவது செய்ய வேண்டும் என்ற பொழுது பொது கம்ப்யூட்டர் அல்லது நண்பர்கள் கம்ப்யூட்டர், தெரிந்தவர்கள் கம்ப்யூட்டர் ரை பயன்படுத்தாலாம்.

நாம் இது போல் மற்றவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்ரை பயன்படுத்தும் பொழுது நாம் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் நம்மை அறியாமலே நம் மெயில் அக்கௌன்ட் Password save கொடுத்து விடுவோம். அல்லது நம்முடைய மெயில் sign out செய்ய மறந்து விடுவோம்

சரி நாம் விசயத்துக்கு வருவோம். பொது இடங்களில் செல்லும் பொழுது நாம் பாதுகாப்பாக பயன்படுத்த browser களிலே வழிமுறை உள்ளது.

நாம் அதிகமாக மூன்று browser களை பயன்படுத்துவோம் அந்த மூன்று browser களில் எப்படி private browsing செய்வது என்று பார்போம்.

கூகுள் குரோம்: 

முதலில் கூகுள் குரோம் உலாவியை (browser) திறந்து கொள்ளுங்கள். அதில் control + shift + N இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் இன்கோங்க்நிடோ (incongnito) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும் அதில் நீங்கள் பயன் படுத்தும் ஏதும் சேமிப்பு ஆகாது. நீங்கள் பார்த்த வலை பக்கம், உங்கள் பற்றிய தகவல்கல் அந்த கணினியில் சேமிக்காது. உங்கள் மெயில் sign out செய்யாமல் கூட விண்டோவை மூடினால் மெயில் sign out ஆகிவிடும்.



மொசிலா பையர்பாக்ஸ்  (Firefox)

இதில் Private Browsing என்று அழைக்கப்படும். இதை பயன்படுத்த ctrl+shift+p இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் (Private Browsing ) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும். இந்த விண்டோவில் உங்களை பற்றிய தகவலகள் சேமிக்கப்படாது.




இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் (Internet Explorer)

இதிலும் Private Browsing என்று அழைக்கப்படும். இதை பயன்படுத்த ctrl+shift+p இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் (Private Browsing ) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும். இந்த விண்டோவில் உங்களை பற்றிய தகவலகள் சேமிக்கப்படாது.



குறிப்பு: மால்வேர் மற்றும் key locker மூலம் தகவல் திருடுவதை இதன் மூலம் தடுக்க முடியாது.

1 comment:

  1. பயனுள்ள பதிவு குரு

    பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...