Tuesday, August 20, 2013

How to use Google Search Engine Efficiently in Tamil

நண்பருக்கு வணக்கம் !

மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக இருக்கும் கூகிள் தேடல் இயந்திரத்தை எப்படி மிக பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்பது பற்றிய அற்புத காணொளி தமிழில்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் இணையதளத்தை பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காணொளி.

மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


How to Use Twitter? - Tips & Tricks video in Tamil

வானொலி மற்றும் தொலைகாட்சியை விட உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள உதவும் ட்விட்டர் (Twitter) என்ற ஒரு இலவச சமூக வலைப்பதிவு சேவையை பயன்படுத்தும் முறை பற்றிய காணொளி தமிழில்.

இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Gopinath Murugaiyan
Tags : tamil techonology videos, how to use twitter in tamil videos, latest twitter videos, twitter video collections free download in tamil

Wednesday, November 7, 2012

ஆட்ஃப்லை (Adfly) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? 1

ஆட்ஃப்லை (Adfly) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?  என்ற இதற்கு முந்தைய பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும்.






நிறைய நண்பர்கள் ஆட்ஃப்லை (Adfly) யில் அக்கௌன்ட் தொடங்கிவிட்டு அதை அப்படியே விட்டு விட்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.

ஆட்ஃப்லை (Adfly) யில் பணம் சம்பாதிப்பது சற்று கடினமான விஷயம் தான். ஏன் என்றால் 1000 கிளிக் களுக்கு தான் 1 dolor வரும்.

ஆட்ஃப்லை (Adfly) கணக்கு தொடங்கியவர்களுக்கு ஆட்ஃப்லை (Adfly) ஒரு வலை பூவில் எப்படி பயன்படுத்துவது என்று பார்போம்.





முதலில் உங்கள் ஆட்ஃப்லை (Adfly) அச்குன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

ஆட்ஃப்லை (Adfly) பக்கத்தில் tools என்பதை கிளிக் செய்யவும். அதில் இப்பொழுது இடது பக்கத்தில் full page script என்று இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது வரும் html கோடிங்கை கோப்பி செய்து உங்கள் ப்ளாக்கிள் பயன்படுத்த வேண்டும்.

இப்பொழுது ப்ளாக்கிள் template > Edit Html > இப்பொழுது < /body> என்ற வரியை கண்டுபிடித்து அதற்கு மேல் இந்த கோடிங் கை பேஸ்ட் செய்யவும்.

இதன் மூலம் உங்கள் ப்ளாக்கிள் உள்ள அனைத்து லிங்க் களும் ஆட்ஃப்லை (Adfly) லிங்க் களாக மாறிவிடும். இதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும்.




Monday, October 29, 2012

பொது இடங்களில் பாதுகாப்பாக இன்டர்நெட் உபயோகிப்பது எப்படி?

நாம் எப்பொழுதும் கணிபொறி மற்றும் இன்டர்நெட் உடன் இருப்பது இல்லை. நாம் வெளியில் செல்லும் பொழுது அல்லது விரைவாக எதாவது செய்ய வேண்டும் என்ற பொழுது பொது கம்ப்யூட்டர் அல்லது நண்பர்கள் கம்ப்யூட்டர், தெரிந்தவர்கள் கம்ப்யூட்டர் ரை பயன்படுத்தாலாம்.

நாம் இது போல் மற்றவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்ரை பயன்படுத்தும் பொழுது நாம் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் நம்மை அறியாமலே நம் மெயில் அக்கௌன்ட் Password save கொடுத்து விடுவோம். அல்லது நம்முடைய மெயில் sign out செய்ய மறந்து விடுவோம்

சரி நாம் விசயத்துக்கு வருவோம். பொது இடங்களில் செல்லும் பொழுது நாம் பாதுகாப்பாக பயன்படுத்த browser களிலே வழிமுறை உள்ளது.

நாம் அதிகமாக மூன்று browser களை பயன்படுத்துவோம் அந்த மூன்று browser களில் எப்படி private browsing செய்வது என்று பார்போம்.

கூகுள் குரோம்: 

முதலில் கூகுள் குரோம் உலாவியை (browser) திறந்து கொள்ளுங்கள். அதில் control + shift + N இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் இன்கோங்க்நிடோ (incongnito) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும் அதில் நீங்கள் பயன் படுத்தும் ஏதும் சேமிப்பு ஆகாது. நீங்கள் பார்த்த வலை பக்கம், உங்கள் பற்றிய தகவல்கல் அந்த கணினியில் சேமிக்காது. உங்கள் மெயில் sign out செய்யாமல் கூட விண்டோவை மூடினால் மெயில் sign out ஆகிவிடும்.



மொசிலா பையர்பாக்ஸ்  (Firefox)

இதில் Private Browsing என்று அழைக்கப்படும். இதை பயன்படுத்த ctrl+shift+p இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் (Private Browsing ) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும். இந்த விண்டோவில் உங்களை பற்றிய தகவலகள் சேமிக்கப்படாது.




இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் (Internet Explorer)

இதிலும் Private Browsing என்று அழைக்கப்படும். இதை பயன்படுத்த ctrl+shift+p இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் (Private Browsing ) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும். இந்த விண்டோவில் உங்களை பற்றிய தகவலகள் சேமிக்கப்படாது.



குறிப்பு: மால்வேர் மற்றும் key locker மூலம் தகவல் திருடுவதை இதன் மூலம் தடுக்க முடியாது.

Friday, October 26, 2012

Windows 8 முழு பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்வது எப்படி?


விண்டோஸ்   இயங்கு தளத்தையே உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். Microsoft நிறுவனம் இன்று விண்டோஸ் 8 ஐ உலகிற்கு இன்று அறிமுகம் செய்கிறது. நீங்கள் இதுவரை விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் xp இவற்றில் எதை பயன்படுத்தினாலும் நீங்கள் விண்டோஸ் upgrade pack வாங்கி பயன்படுதிகொல்ள்ளலாம். Windows 8 Pro (Professional) edition for $39.99 (or 1,999 if you are in India). இந்த விலையில் ஜனவரி 2013 வரை மாற்றம் இருக்காது. 

விண்டோஸ் 8 upgrade pack வாங்கும் விலையில் இருந்தாலும் விண்டோஸ் 8 எப்படி இருக்கும் என்று தெரியாமல் எப்படி வாங்குவது என்று யோசிகிறீர்களா.
உங்களுக்காக தான் இந்த பதிவு விண்டோஸ் 8 முழு பதிப்பையும் நீங்கள் 90 நாட்கள் இலவசமாக பயன்படுத்த முடியும்.

விண்டோஸ் 8 இயங்கு தளத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இப்பொழுது அந்த பக்கத்தின் கீழே சென்று தரவிறக்கம் செய்யவும். அது log in செயுமாறு கேட்கும் உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கௌன்ட் மூலம் உள் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

இந்த பதிப்பு 90 நாட்கள் முடிந்ததும் வேலை செய்யாது.


Monday, October 1, 2012

வயர்லெஸ் மௌஸ் பேட்டரி வாழ்நாளை அதிகப்படுத்துவது எப்படி?


இன்று வயர்லெஸ் மௌஸ் பயன்படுத்துபவர்கள் மிக அதிகம். அவர்களுக்காக இந்த பதிவு  வயர்லெஸ் மௌஸ் பேட்டரி வாழ்நாளை அதிகப்படுத்துவது எப்படி?

Step 1: பழைய வயர்லெஸ் மௌஸ் களில் அதன் கீழேயே ON/OFF சுவிட்ச் கொடுக்கப்ட்டிருகும். தேவையில்லாத நேரங்களில் அதை off செய்து வைக்கலாம். இப்பொழுது உள்ள புது மௌஸ் களில் பயன்படுத்தாத பொழுது ஆடோமடிக்காக OFF ஆக ஆப் ஆகிவிடும். இதன் மூலம் பாட்டரி வாழ்நாளை அதிகப்படுத்தலாம்.

Step 2: மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் நாம் கணிப்பொறியை off செய்யும் பொழுது மௌஸ் ஆப் செய்ய மறந்து விடுவோம். இதனால் பாட்டரி திறன் குறைய வாய்ப்புள்ளது. 

ஒவ்வொரு முறை நாம் கம்ப்யூட்டர்ரை Shutdown or Log off செய்யும் பொழுது மௌஸ் ஆப் செய்ய Voice Reminder செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்போம்.

முதலில் Control Panel லை திறந்து கொள்ளுங்கள். அதில் Change System Sounds என்பதை தேடுங்கள் அதில் Sound என்பதை Click செய்து Exit Windows என்ற option ஐ செலக்ட் செய்யவும்.

கீழே sounds என்ற இடத்தில் Browse என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான Sound ஐ செலக்ட் செய்யுங்கள். 

இப்பொழுது Apply கொடுத்து ok கொடுக்கவும்.


Step 3 : உங்களுடைய மௌஸ் லைட் color மற்றும் Mouse pad color இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இதன் மூலம் மௌஸ் குறைவான பாட்டரி பவர் மட்டுமே பயன்படுத்தும்.

Step 4 : நீங்கள் Travel செய்யும் பொழுது மௌஸ் பயன்படுத்தவில்லை என்றால் மறக்காமல் மௌஸ் சை manual ஆக off செயாவும். ஏன்என்றால் Travel செய்யும் பொழுது மௌஸ் ஆடும் அதனால் உங்கள் பாட்டரி பவர் வேஸ்ட் ஆகும்.



Sunday, September 16, 2012

ப்ளாக் பதிவுகள் அதிகமான வாசகர்களை சென்றடைய முக்கியமான 10 டிப்ஸ்

நீங்கள் நிறைய பதிவுகள் எழுதினாலும் அது நிறைய வாசகர்களை சென்றடையவில்லை என்ற கவலையா, கவலை வேண்டாம் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்களுடைய பதிவுகள் அதிகம் சர்ச் என்ஜினில் முன்னிலைபடுதுவதற்கு பதிவு எழுதும் பொழுது இந்த சில டிப்ஸ் களையும் மனதில் வைத்து பதிவு எழுதுங்கள்.

ப்ளாக் பதிவுகள் அதிகமான வாசகர்களை சென்றடைய முக்கியமான 10 டிப்ஸ்

  • தினமும் ஒரே நேரத்தில் முடிந்த வரை பதிவுகளை பதிவுடுங்கள்.
  • தினமும் முடிந்த வரை குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பதிவுகளை பதிவிடுங்கள். ஒரு பதிவிற்கும் மற்றொரு பதிவிற்கும் 10 to 15 நிமிட இடைவெளியில் பதிவிடுங்கள்.
  • குறைந்தது வாரம் ஒரு பதிவாது பதிவிடுங்கள்.
  • உங்களுடைய பதிவு குறைந்தது 500 வார்த்தைகள் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். அதற்காக மிகவும் நீளமாக பதிவு எழுத வேண்டாம். அதற்கு பதிலாக இரண்டு பதிவுகளாக எழுதலாம்.
  • உங்களுடைய பதிவுகள்  உங்களுடைய சொந்த நடையில் எழுதவும, அடுத்த பதிவில் இருந்து ஒரு வரி கூட copy செய்வதை தவிர்க்கவும்.
  • அதிகமாக keyword களை பயன்படுத்தி எழுதவும். உங்களுடைய ப்ளாக் கிற்கு என்று சில கீ வோர்ட் களை உருவாகி அவற்றை பதிவுகளில் பயன்படுத்தவும்.
  • பதிவுக்கு சம்பந்தம் இல்லாத keyword களை பயன்படுத்த வேண்டாம்.
  • ஒரே பதிவில் திரும்ப திரும்ப ஒரே தகவலை சொல்ல வேண்டாம். அல்லது அதை வேறொரு நடையில் சொல்ல முயற்சிக்கலாம்.
  • உங்களின் பதிவின் தலைப்பு இதுவரை யாரும் வைக்காத தலைப்பாகவும் பதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பாகவும் வைக்கவும்.
  • உங்களுடைய பதிவிற்கு முடிந்த வரை நீங்களே படங்களை உருவாக்கவும், ஒவ்வொரு பதிவிற்கும் முக்கியமாக ஒரு படத்தை இணைக்கவும்.
உங்களுக்கு தெரிந்த தகவலகலையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

Tags: bloggger tips in tamil, tamil blog ideas, blog thodanguvathu eppadi ideas, blog ideas, latest blog news

Related Posts Plugin for WordPress, Blogger...