Monday, October 29, 2012

பொது இடங்களில் பாதுகாப்பாக இன்டர்நெட் உபயோகிப்பது எப்படி?

நாம் எப்பொழுதும் கணிபொறி மற்றும் இன்டர்நெட் உடன் இருப்பது இல்லை. நாம் வெளியில் செல்லும் பொழுது அல்லது விரைவாக எதாவது செய்ய வேண்டும் என்ற பொழுது பொது கம்ப்யூட்டர் அல்லது நண்பர்கள் கம்ப்யூட்டர், தெரிந்தவர்கள் கம்ப்யூட்டர் ரை பயன்படுத்தாலாம்.

நாம் இது போல் மற்றவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்ரை பயன்படுத்தும் பொழுது நாம் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் நம்மை அறியாமலே நம் மெயில் அக்கௌன்ட் Password save கொடுத்து விடுவோம். அல்லது நம்முடைய மெயில் sign out செய்ய மறந்து விடுவோம்

சரி நாம் விசயத்துக்கு வருவோம். பொது இடங்களில் செல்லும் பொழுது நாம் பாதுகாப்பாக பயன்படுத்த browser களிலே வழிமுறை உள்ளது.

நாம் அதிகமாக மூன்று browser களை பயன்படுத்துவோம் அந்த மூன்று browser களில் எப்படி private browsing செய்வது என்று பார்போம்.

கூகுள் குரோம்: 

முதலில் கூகுள் குரோம் உலாவியை (browser) திறந்து கொள்ளுங்கள். அதில் control + shift + N இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் இன்கோங்க்நிடோ (incongnito) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும் அதில் நீங்கள் பயன் படுத்தும் ஏதும் சேமிப்பு ஆகாது. நீங்கள் பார்த்த வலை பக்கம், உங்கள் பற்றிய தகவல்கல் அந்த கணினியில் சேமிக்காது. உங்கள் மெயில் sign out செய்யாமல் கூட விண்டோவை மூடினால் மெயில் sign out ஆகிவிடும்.



மொசிலா பையர்பாக்ஸ்  (Firefox)

இதில் Private Browsing என்று அழைக்கப்படும். இதை பயன்படுத்த ctrl+shift+p இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் (Private Browsing ) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும். இந்த விண்டோவில் உங்களை பற்றிய தகவலகள் சேமிக்கப்படாது.




இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் (Internet Explorer)

இதிலும் Private Browsing என்று அழைக்கப்படும். இதை பயன்படுத்த ctrl+shift+p இந்த மூன்று கீ களை சேர்த்து அழுத்தினால் (Private Browsing ) என்ற விண்டோ திறக்கும் அல்லது கீழே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் செல்லவும். இந்த விண்டோவில் உங்களை பற்றிய தகவலகள் சேமிக்கப்படாது.



குறிப்பு: மால்வேர் மற்றும் key locker மூலம் தகவல் திருடுவதை இதன் மூலம் தடுக்க முடியாது.

Friday, October 26, 2012

Windows 8 முழு பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்வது எப்படி?


விண்டோஸ்   இயங்கு தளத்தையே உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். Microsoft நிறுவனம் இன்று விண்டோஸ் 8 ஐ உலகிற்கு இன்று அறிமுகம் செய்கிறது. நீங்கள் இதுவரை விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் xp இவற்றில் எதை பயன்படுத்தினாலும் நீங்கள் விண்டோஸ் upgrade pack வாங்கி பயன்படுதிகொல்ள்ளலாம். Windows 8 Pro (Professional) edition for $39.99 (or 1,999 if you are in India). இந்த விலையில் ஜனவரி 2013 வரை மாற்றம் இருக்காது. 

விண்டோஸ் 8 upgrade pack வாங்கும் விலையில் இருந்தாலும் விண்டோஸ் 8 எப்படி இருக்கும் என்று தெரியாமல் எப்படி வாங்குவது என்று யோசிகிறீர்களா.
உங்களுக்காக தான் இந்த பதிவு விண்டோஸ் 8 முழு பதிப்பையும் நீங்கள் 90 நாட்கள் இலவசமாக பயன்படுத்த முடியும்.

விண்டோஸ் 8 இயங்கு தளத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இப்பொழுது அந்த பக்கத்தின் கீழே சென்று தரவிறக்கம் செய்யவும். அது log in செயுமாறு கேட்கும் உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கௌன்ட் மூலம் உள் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

இந்த பதிப்பு 90 நாட்கள் முடிந்ததும் வேலை செய்யாது.


Monday, October 1, 2012

வயர்லெஸ் மௌஸ் பேட்டரி வாழ்நாளை அதிகப்படுத்துவது எப்படி?


இன்று வயர்லெஸ் மௌஸ் பயன்படுத்துபவர்கள் மிக அதிகம். அவர்களுக்காக இந்த பதிவு  வயர்லெஸ் மௌஸ் பேட்டரி வாழ்நாளை அதிகப்படுத்துவது எப்படி?

Step 1: பழைய வயர்லெஸ் மௌஸ் களில் அதன் கீழேயே ON/OFF சுவிட்ச் கொடுக்கப்ட்டிருகும். தேவையில்லாத நேரங்களில் அதை off செய்து வைக்கலாம். இப்பொழுது உள்ள புது மௌஸ் களில் பயன்படுத்தாத பொழுது ஆடோமடிக்காக OFF ஆக ஆப் ஆகிவிடும். இதன் மூலம் பாட்டரி வாழ்நாளை அதிகப்படுத்தலாம்.

Step 2: மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் நாம் கணிப்பொறியை off செய்யும் பொழுது மௌஸ் ஆப் செய்ய மறந்து விடுவோம். இதனால் பாட்டரி திறன் குறைய வாய்ப்புள்ளது. 

ஒவ்வொரு முறை நாம் கம்ப்யூட்டர்ரை Shutdown or Log off செய்யும் பொழுது மௌஸ் ஆப் செய்ய Voice Reminder செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்போம்.

முதலில் Control Panel லை திறந்து கொள்ளுங்கள். அதில் Change System Sounds என்பதை தேடுங்கள் அதில் Sound என்பதை Click செய்து Exit Windows என்ற option ஐ செலக்ட் செய்யவும்.

கீழே sounds என்ற இடத்தில் Browse என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான Sound ஐ செலக்ட் செய்யுங்கள். 

இப்பொழுது Apply கொடுத்து ok கொடுக்கவும்.


Step 3 : உங்களுடைய மௌஸ் லைட் color மற்றும் Mouse pad color இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இதன் மூலம் மௌஸ் குறைவான பாட்டரி பவர் மட்டுமே பயன்படுத்தும்.

Step 4 : நீங்கள் Travel செய்யும் பொழுது மௌஸ் பயன்படுத்தவில்லை என்றால் மறக்காமல் மௌஸ் சை manual ஆக off செயாவும். ஏன்என்றால் Travel செய்யும் பொழுது மௌஸ் ஆடும் அதனால் உங்கள் பாட்டரி பவர் வேஸ்ட் ஆகும்.



Related Posts Plugin for WordPress, Blogger...