Wednesday, August 29, 2012

அட்சென்ஸ்ஸில் உங்களுடைய ப்ளாக் RPM ஐ அதிகரிப்பது எப்படி?


இந்த பதிவு எழுதுவதன் நோக்கம் நிறைய நண்பர்கள் அட்சென்ஸ் அக்கௌன்ட் வைத்திருந்தாலும் அதன் மூலம் சரியான வருமானம் இல்லாமல் இருக்கின்றனர்.

உங்களுடைய பக்க பார்வையாளர்கள் நிறைய பேர் வந்தாலும் உங்களுக்கு அதற்குரிய வருமானம் வரவில்லையா அதன் காரணம் என்ன என்று பார்போம். உங்களுடைய RPM குறைவாக உள்ளதா? 

உங்களுடைய வலைப்பூவில் சரியான இடத்தில விளம்பரங்களை இணைப்பதன் மூலம் நம்முடைய வருமானத்தை அதிகரிக்க முடியும். நிறைய வலைப்பூவில் அவர்கள் பதிவுக்கு அருகில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக அதன் நடுவே விளம்பரகளை இணைகின்றனர்.

இப்பொழுது எங்கே விழாமபர்களை இணைப்பது என்று பார்போம்.

கீழே உள்ள படத்தை சற்று கவனயுங்கள்.
உங்களுடைய வருமானம் RPM என்பதை பொறுத்தது. RPM என்றால் ஆயிரம் பக்க பார்வையாளர்களுக்கு உள்ள வருமானம். இதை அதிகரிக்க உங்களுடைய விளம்பரம் ATF: ABOVE THE FOLD  ல் இருக்க வேண்டும்.

உங்களுடைய பிளாக்கர் கை இரண்டாக பிரிக்கலாம்  அது  i)ATF ii) BTF. இப்பொழுது அவற்றை பற்றி விரிவாக பார்போம்.

BTF : BELOW THE FOLD அதாவது உங்களுடைய ப்ளாக் ஓபன் செய்ததும் மௌஸ் மூலம் நகர்த்தி ஸ்க்ரீன் கு கீழே உள்ள பக்கத்திற்கு சென்றால் அது  BELOW THE FOLD உங்களுடைய விளம்பரங்கள் இங்கு குறைவாக இருக்க வேண்டும்.  BELOW THE FOLD ல் குறைவான விளம்பரங்கள் தெரயுமாறு வைக்க வேண்டும்.

ATF: ABOVE THE FOLD என்றால் உங்களுடைய ப்ளாக் ஓபன் செய்ததும் அதை ஸ்க்ரோல் செய்யாமல் ஸ்க்ரீன் னில் தெரியும் பக்கம் அதில் விளம்பரங்கள் தெரயுமாறு வைக்க வேண்டும். இதன் மூலம் உங்குடைய வருவாய் மற்றும் RPM அதிகரிக்கும். 

BTF : BELOW THE FOLD ல் உள்ள விளம்பரத்தின் RPM 0.10 $ என்று இருந்தால் அதே விளம்பரம் ATF: ABOVE THE FOLD ல் இருந்தால் அப்ப்லுது RPM 1.00 $ வரை  இருக்கும். இது தான் வித்தியாசம் நீங்களும் செய்து பாருங்கள். உங்களுடைய ப்ளாக் கில்.

Tuesday, August 28, 2012

பிளாக்கர் பற்றிய அதிகமான மற்றும் உறுதியான தகவல்களை எங்கே காண்பது?

இந்த பதிவு எழுதுவதன் நோக்கம் நிறைய நண்பர்களுக்கு பிளாக்கர் பற்றிய புதிய செய்திகள் வலை பூ அவற்றை பற்றி செய்திகள் போட்ட பின்னரே அறிந்து கொள்கின்றனர்.

 

பிளாக்கர் தளத்தில் மாற்றம் ஏற்பட்டதும் எப்படி அவற்றை அறிந்து கொள்வது என்று பலருக்கும் தெரியவில்லை. இதை தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்தும் தொடருங்கள் மற்றும் அவ்வப்போது பாருங்கள்.

மேலும் உங்களுடைய சந்தேகங்களை பிளாக்கர் லே கேளுங்கள். உங்களுக்கு தேவையான அணைத்து பதில்களும் உடனே கிடைக்கும்.

அலுவலக பிளாக்கர் பக்கம்.

 The Blogger Help Center -பிளாக்கர் பற்றிய அணைத்து தகவல்கள் மற்றும் உதவி தளம்.

Blogger Product Forum – பிளாக்கர் பற்றிய உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

BloggerHelp YouTube Channel – இங்கே பிளாக்கர் பற்றிய பயனுள்ள வீடியோக்கள் இருக்கும்.

Blogger Known Issues –  பிளாக்கர் எதாவது பிரச்சனை என்றால் அது இங்கே வெளியிடப்படும்.

Blogger on Google+ -  கூகிள் பிளஸ்ஸில் பிளாக்கர் பக்கத்தை தொடருங்கள் இங்கே அணைத்து லேட்டஸ்ட் செய்திகள் பகிரப்படும். 

மேலும் உங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

Monday, August 27, 2012

15 ஆண்டுகளுக்கு பிறகு கூகுளில் மாறிய அதிர்ஷ்டம் என் பக்கம் பட்டன்

கூகிள் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இப்பொழுது வரை அதிர்ஷ்டம் என் பக்கம் பட்டன் ஆனது இருந்து வருகிறது. கீழே உள்ள பாடம் 15 வருடங்களுக்கு முன்பு கூகிள் ஆரம்பிக்க பட்ட போது உள்ள பேஜ். 


கூகுளின் முகப்பு பக்கத்தில் அதிர்ஷ்டம் என் பக்கம் ( i am feeling lucky) என்ற பட்டனை பார்த்திருப்பீர்கள், இதில் இப்பொழுது சிறிய மாற்றம் செய்துள்ளது. ஏன்என்றால் இன்ஸ்டன்ட் சர்ச் வந்தும் அதிர்ஷ்டம் என் பக்கம் பட்டன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது. 

இதை அதிகபடுத்தும் விதமாக இந்த முறை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. உங்களுடைய மௌஸ் சை அதற்கு அருகில் கொண்டு சென்றால் அது சுழன்று சுழன்று கீழே உள்ளது போல் நிறைய வாசகங்களை காட்டும். 

 "I'm Feeling Doodly" 
"I'm Feeling Artistic"
 "I'm Feeling Hungry" 
 "I'm Feeling Puzzled" 
 "I'm Feeling Wonderful"

இப்பொழுது   "I'm Feeling Hungry"  என்ற வாசகம் காட்டபட்டால் உங்களுடைய தேடல் கள் உணவு ஹோட்டல் போன்றவை களை சார்ந்ததாக உள்ள ரிசல்ட் டை காட்டும்.   "I'm Feeling Wonderful"  என்று தேடினால் சுற்றுலா தளங்களின் வெப் சைட் களை காட்டும். 


இந்த மாற்றம் இப்பொழுது google.com மில் மட்டுமே உள்ளது மிக விரைவில் மற்ற அணைத்து பக்கங்களிலும் தோன்றும்.

உங்கள் Drop Box அக்கௌன்ட் டை இரண்டடுக்கு பாதுகாப்பு செய்வது எப்படி?

நண்பர்களே நம்மில் பலர் ட்ராப் பாக்ஸ் சில் உங்களுடைய file களை ஸ்டோர் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால் அது பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் வரலாம் அந்த சந்தேகம் இனி தேவை இல்லை.

ஏன்என்றால் இப்பொழுது Drop Box சிலும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுகப்படுள்ளது. இதை எப்படி செய்வது என்று பார்போம்.




Drop Box இரண்டடுக்கு பாதுகாப்பு செய்வது கிட்டத்தட்ட கூகிள் லில் உள்ளது போலவே உள்ளது.

முதலில் இந்த இரண்டடுக்கு பாதுகாப்பு செய்ய Drop Box வெப்சைட்டில் உங்களுடைய பாதுகாப்பு  (security page ) பக்கத்திற்கு செல்லவும் அல்லது இங்கு கிளிக் செய்யவும்.

பாதுகாப்பு பக்கத்தில் லாக் இன் செய்யவும். இப்பொழுது வரும் பக்கத்தில் கீழே மேலே காண்பித்து உள்ளது போல் இருக்கும் அதில் two step verification என்பதில் change என்பதை கிளிக் செய்யவும்

இப்பொழுது pop up window ஓபன் ஆகும் அதில் Get Started என்பதை கிளிக் செய்யவும். 

அடுத்ததாக கடவுச்சொல்லை (password) என்டர் செய்யுமாறு கேட்கும் அதை கொடுத்தும் இரண்டு பகுதிகளாக காண்பிக்கும். இப்பொழுது வரும் பக்கத்தில் use text message என்பதை செலக்ட் (ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் மற்றொரு option னையும் பயன்படுத்தலாம்)  செய்து next கொடுக்கவும் இப்பொழுது இறுதியாக வரும் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள இடத்தில உங்களுடைய நாடு என்ன என்பதை செலக்ட் செய்து உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்கவும். இறுதியாக உங்கள் மொபைல் கு வந்த 6 இழக்க என்னை என்டர் செய்து next கொடுக்கவும். 

இறுதியாக கீழே உள்ளது போல் வரும்.

Dropbox Verification Code


இதில் உள்ள emergency code ஐ ஒரு பேப்பர் இல் எழுதி வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த என்னை பயன்படுத்தி லாக் இன் செய்து இரண்டடுக்கு பாதுகாப்பை disable செய்யலாம்.

குறிப்பு : உங்களுடைய drop box application ஐ புதிதாக தரவிறக்கம் செய்துகொள்ளவும். நீங்கள் இன்னைதுள்ள device களையும் unlink செய்து மீண்டும் link செய்யவும். 


Wednesday, August 22, 2012

பிளாக்கர் : பதிவில் ppt presentation ஐ இணைப்பது எப்படி ?

இன்று இணையத்தில் தமிழ் பதிவுகள் எழுதுபவர் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்குளைடைய பதிவுகள் மேலும் சிறப்படைய இந்த பதிவை எழுதிகிறேன்.

உங்களுடைய பதிவுகளை  ppt presentation ல் உருவாக்கி அதை எப்படி ப்ளாக் பதிவில் பயன்படுத்துவது என்று பார்போம்.

1) முதலில் நீங்கள் பதிவிற்கு தேவையான  ppt presentation ஐ உருவாக்குங்கள்.

http://www.slideshare.net இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு என்று ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்யுங்கள்.

2) அடுத்து அதில் upload என்பதை கிளிக் செய்து உங்களுடைய  ppt presentation upload செயுங்கள்.



3) அடுத்ததாக அதற்கு கீழே வரும் details அனைத்தையும் கிளிக் செய்யவும். இதில் இறுதியாக கீழே உள்ள allow to download என்பதை உங்களுடைய ppt presentation ஐ யாரும் டவுன்லோட் செய்ய கூடாது என்றால் இதை uncheck செய்யவும்.  


4) ppt presentation upload ஆனதும் அது அடுத்த பக்கத்திற்கு செல்லும் அதில் embed எனபதில் உள்ள html code ஐ காபி செய்து கொள்ளவும்.




5) பிளாக்கர் பதிவு எழுதும் கருவியின் HTML என்பதை கிளிக் செய்து அங்கே பதிவு எழுதும் இடத்தில PASTE செய்யவும்.


PASTE செய்ததும் compose என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய ppt presentation தோன்றும். அல்லது அதை preview பார்த்து publish செய்யவும்.

கண்ட்ரோல் பேனல் (Control Panel) ஓபன் ஆகாத பொழுது தேவையற்ற மென்பொருளை நீக்குவது எப்படி?

நம்முடைய கணினியை பராமரிக்க தேவை இல்லாத மென்பொருளை அவ்வப்போது நீக்குவது நல்லது. ஆனால் உங்கள் கணினி வைரஸ் சால் பாதிக்கப்படும் பொழுது கண்ட்ரோல் பேனல் (Control Panel) ஆனது ஓபன் ஆகாது. 

இதனால் நீங்கள் அந்த மென்பொருள் நிறுவிய இடத்திற்கு சென்று அதனுடைய uninstaller ரை தேடி uninstall செய்வீர்கள். இது எல்லா மென்பொருளையும் uninstall செய்ய முடியாது.

சரி இது இல்லாமல் எப்படி uninstall செய்வது என்று பார்போம். 

இது பல இலவச uninstaller மென்பொருள்களின் மூலம் எளிமையாக uninstall செய்ய முடியும்.

Revo Uninstaller என்ற மென்பொருள் முலம் நீங்கள் உங்களுக்கு தேவையில்லாத மென்பொருளை நீக்க முடியும். 

இதை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இதை தரவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும்.


 நிறுவியதும் அதை ஓபன் செய்தால் அதில் நீங்கள் install செய்துள்ள அணைத்து மென்பொருளும் காட்டும் அதில் உங்களுக்கு தேவை இல்லாத மென்பொருளை right click செய்து uninstall என்பதை தேர்வு செய்து uninstall செய்யவும்.

பாடம் 7: கேட்ஜெட் (Gadgets) மற்றும் பிளாக்கர் லேஅவுட் (Layout) பயன்படுத்துவது எப்படி?

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. முந்தய பாடத்தில் ப்ளாக் readers பற்றி பார்த்தோம். இந்த பதிவில் layout டை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்போம். 

முதலில் உங்களுடைய ப்ளாக் கிற்கு செல்லவும். அதில் இடது பக்கத்தில் உள்ள layout என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் வரும். layout ல் மேலே உள்ள பகுதி தலைப்பு பகுதி. கீழே லெப்ட் சைடு உள்ள பகுதி ப்ளாக் போஸ்ட் பகுதி.
கீழே உள்ளது bottom பகுதி. மற்றும் லெப்ட் சைடு பார் உள்ளது இங்கு.

சைடு பார் நம்முடைய தேவைகேற்ப அமைத்து கொள்ளலாம்.


Navbar :

navbar என்பது பிளாக்கர் ரில் மேலே உள்ளது ஆகும். அதில் மாற்றங்கள் செய்ய எடிட் என்பதை கிளிக் செய்யவும். உங்களுடைய navbar எந்த கலரில் தேவை என்பதை தேர்வு செய்யலாம். இல்லை என்றால் navbar off என்பதை தேர்வு செய்தால் அது உங்களுடைய பிளாக்கர் பக்கத்தில் தோன்றாது.

தலைப்பு : (Header ) 

உங்களுடைய வலை பூவின் தலைப்பு மற்றும் அதனுடைய விவரங்களை இங்கே மாற்றலாம். இதை மாற்ற Header என்பதில் எடிட் என்பதை கிளிக் செய்யவும்.

ப்ளாக் போஸ்ட் (Blog Post):

ப்ளாக் போஸ்ட் டில் எடிட் என்பதை கிளிக் செய்து அதில் எப்படி போஸ்ட் தோன்ற வேண்டும். அதனுடைய ஈமெயில் செய்யும் விவரங்கள். கூகிள் ஆட்ஸ் எப்படி தோன்ற வேண்டும். முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தோன்ற வேண்டும் இது போன்ற செட்டிங்க்ஸ் மற்றும் பல செட்டிங்க்ஸ் களை மாற்ற முடியும்.

மேலே உள்ள மூன்று Gadgets களை மட்டும் நீங்கள் நகர்த்த முடியாது மற்ற அணைத்து Gadgets கலையும் நகர்த்த முடியும். உங்கள் மௌஸ் சில் எந்த Gadgets ஐ நகர்த்த வேண்டும் அதை கிளிக் செய்து இழுத்து தேவையான இடத்தில விடுங்கள் மாற்றங்கள் செய்த பின் மறக்காமல் save செய்யுங்கள். 

அடுத்த பதிவில் ஒரு வலை பூவிற்கு தேவையான மிக முக்கியமான Gadgets கள் எவை என்று பார்போம். 

உங்களுடைய சந்தேகங்களை மற்றும் கருத்துகளையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். 

Tuesday, August 21, 2012

பாடம் 6:உங்களுடைய வலைபூவை குறிப்பிட்ட நண்பர்கள் மட்டும் பார்ப்பது எப்படி?

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. இது என்னுடைய அடுத்த பதிவு இதை படிபதற்கு முன்னர் இதற்கு முந்தய பதிவை படித்து விட்டு வாருங்கள். முந்தய பதிவு
பாடம் 5: உங்களின் முதல் வலை பதிவு எழுதுவது எப்படி? 

உங்களுடைய வலைபூ தொடங்கப்படும் பொழுது அது அனைவரும் பார்ப்பது போல் தான் செட்டிங்க்ஸ் ஆனது அமைந்திருக்கும்.

வலை. நீங்கள் ஒரு புதிய வலைப்பதிவை உருவாக்கும் போது இந்த அமைப்பை இயல்பாக செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் நாம் வலை பூ உருவாக்குவது அனைவரும் பார்ப்பதற்கு தான், எனினும் ஒரு சிலர் நண்பர் வட்டதிற்காக வலை பூ உருவாக்குகின்றனர்.

இப்பொழுது உங்களுடைய வலை பூ குறிப்பிட நண்பர்கள் மட்டும் பார்க்கும படி செய்வது எப்படி என்று பார்போம்.

முதலில் உங்களுடைய வலைபூ வில் லாக் இன் செய்து உங்களுடைய செட்டிங்க்ஸ் செய்ய வேண்டிய ப்ளாக் கை ஓபன் செய்யுங்கள்.



அமைப்புகள்> அடிப்படை. "அனுமதிகள்" (settings-> basic-> Permissions ) என்பதற்கு செல்லவும்.

உங்களுடைய பதிவுகள் யாரெல்லாம் எழுதாலாம் என்று நினைகிரீர்களோ அவர்களின் ஈமெயில் ஐ டி யை add authors என்பதை கிளிக் செய்து அங்கே டைப் செய்யவும். டைப் செய்து முடித்ததும் invite authors என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது அவர்கள் மெயிலில் உங்களுடைய லிங்க் கிளிக் செய்யபட்டால் அவர்களும் உங்களுடைய வலை பூவில் பதிவுகள் எழுதி அப்டேட் செய்ய முடியும்.

அதற்கு அடுத்தாக blog readers என்று உள்ளது இதில் தான் நாம் செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்.

அதில் எடிட் என்பதை கிளிக் செய்யவும். மூன்று option கள் இருக்கும்.

any body - யர்ர் வேண்டுமானாலும் படிக்கலாம்

only blog authors - ப்ளாக் authors மட்டும் படிக்கலாம்.

Only these readers - குறிப்பிட நண்பர்கள் மட்டும் படிக்கலாம்.

இதை செலக்ட் செய்து அவர்களுடைய ஈமெயில் ஐ டி யை கீழே உள்ள 
கட்டத்தில் டைப் செய்யவும். இறுதியாக invite readers என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது ஒரு லிங்க் அனைவருடைய மெயில் ஐ டி கும் சென்றிருக்கும். 

அவர்கள் அந்த லிங்க் கை பயன்படுத்தி மூன்று விதமாக உங்களுடைய வலை பூ வில் உள்ள பதிவுகளை படிக்க முடியும்.


அவர்கள் மூன்று விஷயங்கள் ஒன்று செய்ய தூண்டுதல் ஒரு மின்னஞ்சல்:

1. ஏற்கனவே உள்ள Google கணக்கை கொண்டு உங்கள் வலை பூவில் உள்நுழைய வேண்டும்

2. ஒரு புதிய Google கணக்கை (பிளாகரில் உள்நுழைய இது) உருவாக்கி உள்நுழைய வேண்டும்

3. ஒரு விருந்தினராக உங்கள் காண்க.

விருந்தினராக வருபவர்கள் இரண்டு வாரத்திற்கு மேல் நீங்கள் அனுப்பிய லிங்க் வொர்க் ஆகாது. அதற்கு மேல் லும் விருந்தினராக பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் புதிதாக இன்விடே செய்ய வேண்டும்.

Outlook மெயில் லில் இருந்து கொண்டே உங்கள் ஜிமெயில் ளை பயன்படுத்து வது எப்படி?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லூக் (outlook) மெயில் ஆனது அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறன்.


இந்த மெயில் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், வேகமாவும் உள்ளது. ஆனால் நம்முடைய மெயில் அக்கௌன்ட் ஜிமெயில் ஆக இருப்பதால் இதை பயன் படுத்த முடியவில்லையா? கவலை வேண்டாம் outlook மெயில் லில் இருந்து கொண்டே உங்களின் அணைத்து ஜிமெயில் மெயில் களையும் பார்வை இட முடியும். அது மட்டும் இல்லாமல் outlook மெயில் லில் இருந்து கொண்டே நீங்கள் ஜிமெயில் லில் இருந்து மெயில் அனுப்புவது போல் அனுப்ப முடியும்.



இந்த செட்டிக்ஸ் களை எப்படி செய்வது என்று பார்போம்.

ஜிமெயில் லில் எந்த வித மாற்றமும் செய்ய தேவை இல்லை.

outlook மெயில் லில் உங்கள் அக்கௌன்ட் டை திறந்து கொள்ளுங்கள். அக்கௌன்ட் இல்லை என்றால் புதிதாக அக்கௌன்ட் டை ஓபன் செய்யுங்கள். அக்கௌன்ட் ஓபன் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

உங்களுடைய மெயில் அக்கௌன்ட் டில் your Outlook Mail Settings சிற்கு செல்லவும். செட்டிங்க்ஸ் சிற்கு செல்ல உங்களுடைய வலது பக்க டாப் கார்னர் ரில் உள்ள செட்டிங்க்ஸ் பட்டன் னை கிளிக் செய்யவும்.

அதில் மோர் மெயில் செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது அதில்  -> Send Receive from other Email Accounts என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது வரும் பக்கத்தில் You can receive mail from these accounts இதற்கு கீழே add email account என்பதி கிளிக் செய்யவும் அந்த பக்கத்தில் உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட் டை லாக் இன் செய்யவும். இறுதியாக வரும் பக்கத்தில்  go to inbox or mail account எதாவது ஒன்றை தேர்வு செய்து ஓகே கொடுங்கள்.

outlook.com உங்களுடைய மெயில் கு ஒரு verification மெயில் அனுப்பும் அதை ஜிமெயில் லில் திறந்து அந்த லிங்க் கை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய outlook மெயில் லில் பாருங்கள் உங்களுடைய அனைத்து ஜிமெயில் லில் உள்ள மைல்களும் உங்களுடைய outlook mail கு வந்து விடும் சிறது நேரம் எடுத்து கொள்ளும் உங்களுடைய மெயில் அப்டேட் ஆக.

இப்பொழுது நீங்கள் மெயில் அனுப்பும் பொழுதும் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் மெயில் ளை செலக்ட் செய்து அனுப்பினால் அது உங்கள் ஜிமெயில் லில் இருந்து அனுப்பியது போல் உங்களுடைய நண்பர்களுக்கு மெயில் போகும். இதன் மூலம் உங்களுடைய from அட்ரஸ் மாற்ற தேவை இல்லை.

இந்த முறை மட்டும் இல்லாமல்உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட் டில் ஆட்டோ forwarding செய்வதன் முலமும் உங்களுடைய மெயில் களை உங்களுடைய oulook மெயில் லில் பெறலாம். 

உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

Google FACEBOOK அரட்டை மற்றும் கருத்துக்கள் ட்ராக் செய்ய போகிறது


Facebook சமீபத்தில் புதிய அம்சங்கள் நிறைய அறிமுகப்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு அவர்கள் பேஸ்புக் அரட்டை அவர்கள் பதிவர் பக்கங்கள் மற்றும் வலைத்தளங்கள் பயன்படுத்த செய்த நீட்சி பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

அவர் வலைப்பதிவு கருத்து தெரிவிப்பவக்கும் போது நீங்கள் ஒரு வலைப்பதிவில் அது உங்களுக்கு அறிவிப்புகளை தரும். பதிவு செய்தது உறுப்பினர் மற்றும் கருத்து உறுப்பினர் இடையே வேறுபாடு உள்ளது.


 இந்த புதிய பேஸ்புக் கருத்து அட்டவணையிடுதல் அம்சம் சில விவரங்கள் மற்றும் நன்மைகளை பார்ப்போம்.

பேஸ்புக் இணைய அரட்டை மற்றும் கருத்துரைகள் அணுக கூகிள் அனுமதி அளித்தது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. மூன்றாம் தரப்பினர் தளங்கள் நம் அரட்டை வரலாறு உளவவ முடியும் என்பதை ஏன் என்று தெரியவுல்லை.
அது நான் பிடிக்காதது ஒன்று.

இது பேஸ்புக் எங்கள் தனியுரிமை மற்றவர்களுக்கு திறந்து கொடுக்க நினைக்கிறது. பெயரில்லாத ஹேக்கர்ஸ் குழு facebook நமது விவரங்களை மூன்றாம் நிறுவனங்கள் மற்றும் அரசு கொடுக்க நினைக்கிறது. இறுதியாக அவர்கள் மற்றொரு நிறுவனத்தின் எங்கள் தனியுரிமை வெளியிட போகிறது

Friday, August 17, 2012

உங்கள் பிளாக்கர் டேம்ப்லெட்டை எப்படி சிறந்த SEO Friendly டெம்ப்ளேட் ஆக மாற்றுவது

பல நண்பர்கள் ப்ளாக் கில் பதிவுகள் எழுதினாலும் அவர்களுடைய் ப்ளாக் சர்ச் எஞ்சினில் தோன்றுவதில்லை. இதற்கு காரணம் உங்களுடைய டெம்ப்ளேட் சர்ச் எஞ்சின் னுக்கு தகுந்த மாதிரி இல்லை.




அதை எவ்வாறு மாற்றுவது என்று பார்போம்


1. சரியான Meta Description and Keywords Tags சை டெம்ப்ளேட் டில் சேர்ப்பது

 ப்ளாக் டெம்ப்ளேட் என்பது நாம் உருவாகியது இல்லை. அது வேறு இடத்தில இருந்தோ அல்லது ப்லாகில் உள்ள டேம்பெடை பயன்படுதியிருபீர்கள். இதனால் அதில் சரியான Meta Tags இருக்காது. கீழே உள்ள கோடிங் கை பயன்படுத்தி அதை உங்கள் டேம்பெடே உடன் சேருங்கள்.

முதலில் Blogger.com கு செல்லுங்கள் அங்கு உங்களுடைய ப்ளாக் டேம்ப்லேடே கு செல்லுங்கள்.

உங்கள் டெம்ப்ளேட் டை எடிட் செய்யும் முன்னர் back up எடுத்து கொள்ளுங்கள் 

Template >> Edit HTML >> Proceed.

exapnd widget template என்பதை கிளிக் செய்து ctrl +F கீ பிரஸ் செய்யவும் இப்ப்லொழுது <head> இதை கோடிங்கில் தேடவும். இதற்கு கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும். இப்பொழுது உங்கள் டெம்ப்ளேட் டை சேவ் செய்யுங்கள்.
Search For  <head> and just bellow it paste the following Code

*******************************************************
<meta content='text/html; charset=utf-8' http-equiv='Content-Type'/>
<meta content='Your_Blog_Description_Here(வலை பூவின் விளக்கம்)' name='description'/>
<meta content='Your_Blog_Keywords_Here.(கீவோர்ட்)' name='keywords'/>
*******************************************************

இந்த கோடிங்கில் Your_Blog_Description_Here, Your_Blog_Keywords_Here இதற்கு பதிலாக உங்களுடைய தகவல்களை மாற்றுங்கள்.



2. H2 tags சை ப்ளாக் டைட்டில் கு பயன்படுத்த வேண்டும்.

சிறந்த SEO ப்ளாக் h2 டாக்ஸ் பயன்படுத்த வேண்டும் இதை செய்ய மீண்டும் உங்களுடைய ப்ளாக் html editor இல் கீழே உள்ள கோடிங் கை தேடுங்கள்.  

*******************************************************

<h3 class='post-title'>
<b:if cond='data:post.link'>
<a expr:href='data:post.link'><data:post.title/></a>
<b:else/>
<b:if cond='data:post.url'>
<a expr:href='data:post.url'><data:post.title/></a>
<b:else/>
<data:post.title/>
</b:if>
</b:if>
</h3>

  *******************************************************

இந்த கோடிங் கு பதிலாக கீழே உள்ள கோடிங் கை கொண்டு மாற்றுங்கள்.

*******************************************************
<h2 class='post-title entry-title'>
<b:if cond='data:post.link'>
<a expr:href='data:post.link'><data:post.title/></a>
<b:else/>
<b:if cond='data:post.url'>
<a expr:href='data:post.url'><data:post.title/></a>
<b:else/>
<data:post.title/>
</b:if>
</b:if>
</h2>

*******************************************************

மாற்றியதும் உங்களுடைய டேம்ப்லேட் டை save செயுங்கள்.


3. போஸ்ட் டைட்டில் லை SEO கு தகுந்த மாதிரி மாற்ற வேண்டும்.

நீங்கள் இந்த கோடிங்கை பயன்படுத்தாமல் இருந்தால் உங்களுடிய ப்ளாக் சர்ச் என்ஜின் இல் தோன்றும் பொழுது முதலில் உங்களுடைய ப்ளாக் ன் பெயர், பதிவின் தலைப்பு இறுதியாக தேடிய கீ வோர்ட் தோன்றும்.

இதனால் உங்கள் ப்ளாக் தேடலில் முகியதுவம் இல்லாமல் போய் விடும்.
கீழே உள்ள கோடிங் கை பயன்படுத்தினால் உங்களின் பார்வையாளர்கள் அதிகமாகும். இதை அப்டேட் செய்து சில நாட்கள் கழித்து பாருங்கள்.

முதலில் Blogger.com கு செல்லுங்கள் அங்கு உங்களுடைய ப்ளாக் டேம்ப்லேடே கு செல்லுங்கள்.

உங்கள் டெம்ப்ளேட் டை எடிட் செய்யும் முன்னர் back up எடுத்து கொள்ளுங்கள் 

Template >> Edit HTML >> Proceed.

exapnd widget template என்பதை கிளிக் செய்து ctrl +F கீ பிரஸ் செய்யவும் 

    இதில் கீழே உள்ள லைன் னை தேடவும் 

    Search For <title><data:blog.pageTitle/></title>

    அதற்கு பதிலாக கீழே உள்ள கோடிங் கை பேஸ்ட் செய்து உங்கள் டெம்ப்ளேட் டை save செயுங்கள்.

*******************************************************
<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title><data:blog.pageTitle/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>
*******************************************************

ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

பாடம் 5: உங்களின் முதல் வலை பதிவு எழுதுவது எப்படி?

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. கடைசி பதிவில் டஷ்போர்ட் பற்றி பார்த்தோம். முந்தய பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

டஷ்போர்ட் டில் வீவ் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும். அல்லது உங்கள் ப்ளாக் வெப் அட்ரஸ் சை ப்ரௌசெரின் அட்ரஸ் பாரில் டைப் செய்து பார்க்கவும். 
இப்பொழுது உங்கள் வலைப்பூவில் No Post என்று இருக்கும்.

கீழே உள்ள படத்தை கவனிக்கவும்.


டஷ்போர்ட் டில் ஆரஞ்சு நிற பென்சிலை கிளிக் செய்தால் மேலே உள்ளது போல் வரும்.

இதில் post என்ற இடத்திற்கு அடுத்து வரும் இடத்தில உங்களுடைய பதிவின் தலைப்பை டைப் செய்யுங்கள்.

அதற்கு கீழே உள்ள பெரிய பாக்ஸ் இல் உங்களுடைய பதிவுகளை டைப் செயுங்கள்.

உங்களுடைய பதிவு களுக்கு இடையே படங்களை சேர்க்க link என்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள படத்தை கிளிக் செய்து இமேஜ் ஜெய் சேர்க்க முடியும்.

லிங்க் உருவாக்க தேவையான வார்த்தையை செலக்ட் செய்து அடுத்து லிங்க் என்பதை கிளிக் செய்யவும் இப்பொழுது வரும் பாக்ஸ் இல் உங்கள் லிங்க் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.

மேலும் எழுத்தை மாற்ற மேலே உள்ள நார்மல் என்பதை மாற்றி பார்க்கவும் தேவையானதை செலக்ட் செய்து மாற்றி பார்க்கவும்.

வீடியோ சேர்ப்பதற்கு இமேஜ் கு அடுத்து உள்ள படத்தை கிளிக் செய்து வீடியோ அப்லோட் செய்து ஓகே கொடுக்கவும்.

யூடுப் வீடியோ களை ஷேர் செய்யலாம். உங்களுடைய வெப்காம் மில் ரெகார்ட் செய்தும் பதிவேற்றாலம்.

இறுதியாக உங்களுடைய பதிவை புப்ளிஷ் அல்லது save செய்யுங்கள். புப்ளிஷ் செய்தல் பதிவு உங்கள் ப்ளாக் கை பார்த்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நீங்கள் புப்ளிஷ் செய்ததும் இதை கூகிள் பிளஸ் சில் ஷேர் செய்யுங்கள் என்ற விண்டோ ஓபன் ஆகும். உங்களுடைய பதிவு உங்களுடைய பக்கத்தில் சஹர் செய்ய விரும்பினால் ஷேர் பட்டனை கிளிக் செய்யுங்கள் இல்லை என்றால் கான்சல் கிளிக் செய்யுங்கள்.

உங்களுடைய சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நன்றி

Wednesday, August 15, 2012

பேஸ்புக் மற்றும் கூகிள் பிளஸ் சில் தானாகவே பதிவுகளை அப்டேட் செய்யும் வசதி

அது தானாக உங்கள் பேஸ்புக் ரசிகர் பக்கம் பதிவுகளை  மேம்படுத்தும் போது, HootSuite ஒரு நல்ல வழி. இதன் மூலம் எளிதாக உங்களுடைய பதிவுகள் உங்கள் ரசிகர் பக்கத்தில் அப்டேட் ஆகிவிடும்.
இதில் இலவசமாக பயன்படுத்தும் பொழுது உங்களுடைய லிங்க் ஷர்ட் லிங்க் களாக தோன்றும்.

தானாகவே பேஸ்புக் அப்டேட் செய்யும் வசதியை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்

முதலில் இங்கு சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உறவாகி கொள்ளுங்கள். கணக்கு உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்.

1. உங்களுக்கான கணக்கை உருவாக்க இங்கு சென்று www.hootsuite.com  சைன் அப் (sign up) பொத்தானை கிளிக் செய்யவும்.

2. இதில் இரண்டு விதமான விருப்பத் தேர்வு உள்ளது (ப்ரோ பதிப்பு கிடைக்கிறது) அடிப்படை இலவச செய் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய வசதிக்கு தகுந்தார் போல் தேர்ந்தெடுக்கவும்.

3. உங்களுக்கு என்று கணக்கு தொடங்கிய உடன் அடுத்ததாக தானாக பேஸ்புக் கில் பதிவுகள் அப்டேட் ஆகுவதற்கு செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்

4. உங்களுடைய கணக்கில் நுழைத்தும் இடது புறம உள்ள பட்டன் னை கிளிக் செய்து அதில் Settings>Social Networks. என்பதை கிளிக் செய்யவும் அதில் Add Social Network link. என்பதை கிளிக் செய்யவும். அல்லது மெயின் ஸ்க்ரீனில் கிளிக் Add Social Network link. என்பதை கிளிக் செய்யவும்.


5. இப்பொழுது அதில் பேஸ் புக் பேஜ் என்பதை கிளிக் செய்யவும். அதில் connect with facebook என்பதை கிளிக் செய்யவும்.

6. இப்பொழுது அது உங்களை பேஸ்புக் கில் லாக் இன் செய்யுமாறு சொல்லும். நீங்கள் ஏற்கனவே லாக் இன் செய்து இருந்தால் அது அனுமதி கேட்கும் அதில் உள்ள அனைத்தையும் தெளிவாக படித்து விட்டு அனுமதி அளிக்கவும். கிளிக் allow பட்டன்.

7. அனுமதி கொடுத்தும் உங்களுடைய பக்கங்கள் அனைத்தையும் காட்டும் உங்களுக்கு எந்த பேன் பேஜ் அப்டேட் ஆக வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.

இறுதியாக Rss Feed லிங்க் சேர்ப்பது 

8. மீண்டும் இடது பக்கம் உள்ள பட்டனை கிளிக் செய்து அதில் செட்டிங்க்ஸ் தேர்வு செய்யவும் அதில் rss/atom என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக அதில் மேலே உள்ள பிளஸ் பட்டனை கிளிக் செய்து புதிய rss link கை சேர்க்க வேண்டும் 

9. Feed Url என்ற இடத்தில எந்த வலைபூ வோ அதன் பீட் url link கை கொடுக்கவும். அடுத்த கட்டத்தில் உங்களுடைய பேன் பேஜ் ஜெய் செலக்ட் செய்யவும் அடுத்த கட்டத்தில் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்பதை தேர்தெடுக்கவும்



அதற்கு அடுத்ததாக ஒவ்வொரு முறையும் எத்தனை பதிவுகள் அப்டேட் செய்ய வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும் அதிக பட்சமாக ஒரு நேரத்தில் ஐந்து பதிவுகள் செய்ய முடியும்.

உங்களுடைய லிங்க் கு முண்டி சேர்க்க வேண்டியி பெயரை இறுதிய உள்ள கட்டத்தில் எழுதவும்.

கடைசி கட்டத்தில் உங்களுடைய லிங்க் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தடுத்து save feed என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உங்களுடைய பதிவுகள் உங்களுடைய பக்கத்தில் தானாகவே ஷேர் செய்யப்படும். இதே முறையில் கூகிள் பிளஸ் சம் பத்வுகள் தானாக ஷேர் செய்யலாம் 

சந்தேகம் மற்றும் தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். 

பாடம் 4: வலைப்பூவின் டாஷ்போர்ட் (Dashboard) பற்றிய தகவல்கள்

உங்களுடைய வலைபூ ஆரம்பமாகிவிட்டது. இப்பொழுது நீங்கள் அதை நிர்வகிப்பது பற்றி பார்போம்.

பிளாக்கர் டஷ்போர்ட் மிக முக்கியமான ஒன்று. இதில் புது ப்ளாக் தொடங்க நீங்கள நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்து முந்தய பதிவை பார்த்து இதில் மற்றொரு ப்ளாக் தொடங்கலாம்.

உங்களுடைய ப்ளாக் வரிசையாக காட்டப்படும். அதில் புதியதாக தொடங்கிய ப்ளாக் மேலே இருக்கும்.

அடுத்ததாக ஆரஞ்சு நிற பட்டன் ஒன்று உள்ளது இது புதிதாக அந்த ப்லாகில் பதிவு எழுத அதை கிளிக் செய்யவும். அடுத்தது ப்லாகில் அணைத்து வசதிகளும் அதில் கொடுகபடிருகும். அதற்கு தனியாக ஒரு பதிவு எழுத வேண்டி இருக்கும். 

இறுதியாக வீவ் ப்ளாக் அது உங்களுடைய வலை பூவை பார்க்க கிளிக் செய்யவும்.

உங்களுடைய ப்லாகில் பதிவுகள் எழுத தொடங்கியதும் அதன் கீழே வரகூடியவை 

• எத்தனை பக்கம் காட்சிகள் உங்கள் தளத்தில் கடந்த வாரத்தில் வந்துள்ளது.
• பதிவுகள் எண்ணிக்கை (வரைவுகளை உட்பட) மற்றும் கடைசி வெளியீட்டு தேதி
• உங்கள் தொடருகிறவர்கள்  மக்கள் எண்ணிக்கை 

எதை பற்றி எழுதபோகிறேர்கள் என்று யோசித்து வையுங்கள் அடுத்த பதிவில் பதிவு எழுதுவது எப்படி என்று பார்போம். 

தொடர்ந்து ஆதரவு அளித்து பின்னோட்டம் கொடுத்து ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு நன்றி


Tuesday, August 14, 2012

பிளாக்கர் வலை பூ அதிகமாக பயன்படுத்தபடுவது ஏன்?

தொடந்து பிளாக்கிங் செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் பிளாக்கிங் தளங்களில் ஹோஸ்டிங் Blogger இன் வலைத்தளங்களின் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் அதில் பல நன்மைகளும் குறைபாடுகளும் உள்ளன, மற்றும் வெவ்வேறு தளங்களில் அவர்கள் வலைப்பதிவின் வெளியே வேண்டும் என்பதை பொறுத்து வெவ்வேறு மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

 
பிளாக்கர் வலை பூ வலைப்பதிவிட தளம், இருப்பினும், இது பல நன்மைகளை கொண்டுள்ளது. பயன்படுத்த மிக எளிமையாகவும் உள்ளது இதனால் அனைவரும் பிளாக்கர் வலை பூ வையே விரும்புகின்றனர்.

இதில் முக்கியமான ஐந்து காரணங்களை பற்றி இந்த பதிவில் அலசுவோம்.



1. பிளாக்கர் வலை பூ ஐ பயன்படுத்த எளிதானது
  • எந்த ஒரு சந்தேகம் இல்லாமல்  பிளாக்கர்கள் பயன்படுத்த எளிதான பிளாக்கிங் தளம் உள்ளது. 
  • நீங்கள் விரைவில் பதிவு எழுத மற்றும் வெளியிட, படங்களில் சேர்க்க, உங்கள் இணைய தளத்தில் வருகையாளர்கள் பற்றி  பார்க்கலாம்  
  • மேலும் அனைத்து, நீங்கள் பின்பற்ற வலைப்பதிவுகளில் ஒரு பட்டியலில் தங்களுக்கு எளிமையாக கிடைக்கிறது. 
  • இதன் மூலம் அவர்களது பதிவுகளை எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

2. பிளாக்கர் வலை பூ டொமைன்

  • பெரும்பாலான மக்கள் பிளாக்கிங் தொடங்கும் போது அவர்கள் பிளாகரில் "www.blogname.blogspot.com" போன்ற ஏதாவது இருக்கும் .
  •  நீங்கள் உங்கள் மூலம் ஒரு பெயரளவான கட்டணம் செலுத்தி உங்களுக்கென்று தனி டொமைன் பெயர் வாங்க முடியும் அதன் மூலம் உங்களுடைய வலைபூ மேம்படுத்த முடியும்.  அதனால்,  நீங்கள் "www. blogname.com" என்று தோன்றும், 
  •  உங்கள் தளத்தில் சுய ஹோஸ்டிங் இருந்தால் அதன் பார்வையாளர்கள் மேலும் அதிகரிக்கும்.

3. பிளாக்கர் வலை பூ எளிதாக Google AdSense பயன்படுத்தமுடியும்
  • கூகிள் பிளாக்கர் சொந்தமாக Google AdSense உள்ளதால் ஏற்கனவே உங்கள் பிளாகர் கணக்கில் எளிமையாக ஆட்ஸ் களை இணைக்க முடியும். 
  • இந்த நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இருந்து ஒரு வருவாய் ஈட்டிய ஆரம்பிக்க முடியும் என்றால் போய் எல்லாவற்றையும் அமைத்து விளம்பர அடிப்படையில் செல்ல தயார். 

4. Google வலைப்பதிவு தேடல் செயல்பாடு
  • பிளாக்கர் வலை பூவின் மிகப்பெரிய நல்ல செயல்பாடு இது தான். பிளாக்கர் தளம் நம் எந்த வித செயல்படும் செய்யாமல் நம்பமுடைய பதிவுகள் கூகிள் சர்ச் இல் தோன்ற ஆரம்பித்துவிடும்.

5. Blogger எளிதாக மற்றும் SEO பயன்படுத்த இலகுவாக  இருக்கும்
  • உங்கள் பிளாகர் வலை பூவில் நாம் பதிவரும் அனைத்தும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.
  • அவைகள் கூகிள் சர்ச் என்ஜினில் மிக எளிதாக தோன்ற ஆரம்பித்துவிடும்

பாடம் 3: வலை பூ தொடங்குவது எப்படி வீடியோ தொகுப்பு

வலை தொடங்குவதில் சந்தேகம் இருந்தால் இந்த வீடியோ தொகுப்பை பார்க்கவும். இது மிக எளிமையாக உங்களுக்கு புரியும் எப்படி தொடங்குவது என்று




உங்களுடைய மேலான கருத்துகளை தெரியபடுத்தவும்.




பாடம் 2: வலை பூவில் உங்களுக்கான ப்ளாக் தொடங்குவது எப்படி

முதல் பதிவே அதிகமான வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இரண்டாவது பதிவை எழுதுகிறேன். உங்களுடைய கருத்துகளை தவறாமல் தெரியபடுத்துங்கள்.

முந்தய பதிவை படிக்க இங்கு சொடுக்கவும். 

முதலில் உங்களுடைய வலைபூவிற்கான பெயரை தேர்வு செய்துவிட்டீர்களா. அந்த பெயர் யாரும் பயன்படுததாக இருக்கவேண்டும்.

அடுத்து பிளாக்கர் தளத்தில் உள் நுழைத்தும் முந்தய பதிவில் காட்டியது போல்  அதில் நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது கீழே காட்டியது போல் வரும். அதில் 

டைட்டில் (TITLE)

அதில் டைட்டில் (title ) என்ற இடத்தில உங்களுடைய வலைபூவிற்கு உரிய தலைப்பு வையுங்கள். தலைப்பு எதுவானாலும் இருக்கலாம் ஆனால் சற்று பொருத்தமாக வையுங்கள்.

அட்ரஸ் (ADDRESS)

அடுத்தது அட்ரஸ்( address) அதில் உங்கள் வலை பூவிற்கு சரியான எளிமையான அட்ரஸ் கொடுங்கள். 

அட்ரஸ் எளிமையாக இருந்தால் தான் வாசகர்கள் மனதில் நிறுத்த உதவும்.


மேலே காட்டியது போல் வலை பூ வின் அட்ரஸ் இருக்கும். நீங்கள் வைக்கும் பெயரோடு blogspot என்ற பின் ஒட்டு இருக்கும். 

உங்களுடைய அட்ரஸ் சை அதில் டைப் செய்யும் பொழுது அது வேறு யாரும் பயன்படுததாக இருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளும். அது வரை மாற்றி மாற்றி முயற்சிக்கவும்.

டெம்ப்ளேட் (TEMPLATE)

அடுத்தது டெம்ப்ளேட் இங்கு உங்களுடைய வலைத்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அதில் உங்களுக்கு பிடித்த டேம்லேட் டை கிளிக் செய்யவும் .
இறுதியாக (create blog) கிரியேட் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும் சில நொடிகளில் உங்களுடைய வலை பூ உருவாகிவிடும்.

உங்களுக்கு மேலும் சந்தேகம் இருப்பின் இந்த வீடியோ இணைப்பை பார்க்கவும்

Monday, August 13, 2012

ஷார்ட்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் டிரைவில் இருந்து தகவல்களை எப்படி எடுப்பது?

தொடர்ந்து ஆதரவு அளித்து பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி. இது புதிய பதிவு. பல நண்பர்கள் அவர்களுடைய பெண் டிரைவ் வைரஸால் பதிக்கப்படும் பொழுது அதில் இருந்து தகவல்களை மீட்டெடுக்க கஷ்டபடுகின்றனர்.


வைரஸ் பாதித்த பெண் டிரைவ் வில் அணைத்து போல்டர்களும் ஷார்ட்கட் களாக மாறிவிடும். இதனால் உங்களுடைய பைல் களை எடுக முடியாமல் கஷ்டபடுகின்றனர்.

இப்பொழுது எப்படி வைரஸ் பாதித்த பெண் டிரைவில் இருந்து பைல்கள் மீட்டெடுப்பது என்று பார்போம்.

முதலில் உங்கள் பெண் டிரைவ் வை சிஸ்டம் உடன் இணையுங்கள்

உங்கள் பெண் டிரைவ் டிரைவ் லெட்டர் என்ன என்பதை பார்க்கவும். ( for example D: or F: like that)

கிளிக் ஸ்டார்ட் பட்டன் அண்ட் ரன் னை கிளிக் செய்யவும்..

(start->run) அல்லது விண்டோஸ் கீயை +R கீ யை ஒரே நேரத்தில் அழுத்தவும்.

இப்பொழுது வரும் ரன் விண்டோவில் cmd என்று டைப் செய்து என்டர் கி பிரஸ் செய்யவும்.

ATTRIB -H -R -S /S /D G:\*.*

அதில் வரும் கருப்பு நிற விண்டோவில் கீழே உள்ளது போல் டைப் செய்து என்ட்டர் கீ பிரஸ் செய்யவும். இதில் உள்ள G கு பதிலாக உங்களுடைய பெண் டிரைவவின் எழுத்தை பயன்படுத்தவும்.

மேலே உள்ளதை டைப் செய்து விட்டு என்ட்டர் கீ அழுத்தி சிறிது நேரம் காத்திருக்கவும் ப்ரோசெச்ஸ் முடிந்ததும் உங்களுடைய பெண் டிரைவ் வை திறந்து அதில் உள்ள சரியான போல்டெர் கலை விட்டுவிடு ஷார்ட்கட் பைல் கலை அழிக்கவும். 

உங்களுடைய கருத்துகளை தெரியபடுத்தவும்..

பாடம் 1: வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ?

(Blogger) ப்ளாக்கின் மூலம் நீங்கள் எளிதாக ஒரு உங்கள் எண்ணங்கள் வெளியிட ஒரு இலவச வலை சார்ந்த கருவியாகும்.

இதை வெப்ப்ளாக் (weblog) என்று அழைக்கப்படும் இலவச சேவை ஆகும். ப்ளாக் மூலம் நீங்கள் உங்களுடிய கருத்துகளை வெளியிடமுடியும். இந்த சேவை முற்றிலும் இல்லவசமான சேவை. பலவிதமான ப்ளாக் இலவச சேவை அளித்தாலும் அதில் அதிகமா பயன்பதுடுவது கூகுளின் பிளாக்கர் மற்றும் வோர்ட்ப்றேச்ஸ் தளமும்.

நாம் இந்த பதிவுகளின் தொடரில் பார்க்க இருப்பது பிளாக்கர் பற்றியது.

பிளாக்கர் சிறப்பு அம்சங்கள்:

இது முற்றிலும் இலவசம்.

வெறும் கணினி அறிவு மட்டும் இருந்தால் போதும் உங்களுக்கு என்று ஒரு வலைப்பூவை நீங்கள் உருவாக்கலாம்.

வெப்சைட் பயன்படுத்த உங்களுக்கு வெப் டிசைன் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வலைபூ பயன்படுத்த அது தேவை இல்லை.

 இது பயன்படுத்த நம்பமுடியாத அளவிற்கு எளிது!

 இது எளிதாக போன்ற Picasa, யூ டியூப், கூகுள் போன்ற பிற Google சேவைகள், உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் பதிவுகளை நீங்கள் மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் வெளியிடலாம் அல்லது உங்கள் மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்

ப்ளாக் தொடங்குவது எப்படி
சரி நாம் தொடங்குவது பற்றி பார்போம். ப்ளாக் தொடங்க உங்களுக்கு கூகிள் அக்கௌன்ட் இருந்தால் போதும். இப்பொழுது கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பிளாக்கர் வெப்சைட் கு செல்லுங்கள்.




அங்கே கூகிள் அக்கௌன்ட் மூலம் லாகின் செயயுங்கள். கூகிள் அக்கௌன்ட் என்றால் யூ டியுப், ஜிமெயில், கூகிள் பிளஸ் எதாவது ஒன்றில் உங்களுக்கு அக்கௌன்ட் இருந்தால் அதை கொண்டு லோக் இன் செய்யுங்கள். இல்லை என்றால் sign up பட்டன் னை கிளிக் செய்து உங்களுக்கு என்று ஒரு அக்கௌன்ட் டை உருவாக்குங்கள்.

அடுத்த பதிவில் உங்களுக்கென்று ஒரு வலை பூவை உருவாகுவது எப்படி என்று பார்போம். தொடந்து காத்திருங்கள்.

உங்கள் பக்கத்திற்கான பெயரை தேர்வு செய்து வைத்திருங்கள்.


வலைப் பூ (பிளாக்) என்றால் என்ன?

ஒரு வலை பூவில் நீங்கள் எழுதும் ஒரு பதிவு வலை பதிவு.வலை பதிவு என்பது இணையத்தின் மூலம் உங்களுடைய கருத்துகளை உங்களுக்கென்று ஒரு பக்கத்தில் தெரிவிப்பது. மற்றும் உங்களுக்கு தெரிந்த பல தொழில்நுட்பங்களை கற்றுகொடுக்கலாம் அறிவு சம்பந்தமாக நீங்கள் அறிந்தவற்றை உங்களுடைய பகத்தின் மூலம் தெரியபடுதலாம்.

இதற்கு மொழி ஒரு தடையல்ல. புத்தகத்தில் எழுதுவது போல வலைப்பூவில் உங்களுடைய கருத்துகளை நீங்கள் எழுதலாம். இணையம் மூலம் அனைவரும் உங்களுடைய கருத்துகள், கவிதைகள், கதைகள், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் களை படிக்க அவர்களுக்கு உதவியை இருக்கும்.



வலைபதிவு 
வலைபதிவு என்பது உங்களுடைய வலை பூவில் உங்களுடைய பதிவுகள் பதிப்பது. பலவகையான வலை பூக்கள் இல்லவசமாக கிடைகின்றன. அதிலும் குறிப்பாக பிளாக்கர் கூகுளின் வலை பூ அதிகமா பயன்படுத்தபடுகிறது.

இது என்னுடைய முதல் தொழிநுட்ப பதிவு தொடர்ந்து வலை பூ பயன்படுத்துவது பற்றி எழுத உள்ளேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியபடுத்தவும். மேலும் உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியபடுத்துங்கள்.

(நீங்கள் படித்துக்கொண்டிருப்பதும் ஒரு வலைப்பதிவுதான். ).
Related Posts Plugin for WordPress, Blogger...