Wednesday, September 12, 2012

பாதுகாப்பாக internetல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6


வழிமுறை 1: எப்பொழுதும் உங்களுடைய address bar ல் spelling சரியாக உள்ளதா என்று பார்க்கவும். ஒரு எழுத்து மாறினாலும் வேறு தளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அங்கு உங்களுடைய தகவல்களை பறிமாறினால் அது திருடப்படலாம்.

வழிமுறை 2 :  உங்களுடைய அட்ரஸ் பார் padlock ஆனது http என்பதற்கு பதிலாக https: என்று இருக்க வேண்டும். https என்று இருந்தால் உங்களுடைய தகவல்களை திருடினாலும் படிக்க முடியாத அளவில் இருக்கும். இதை ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் பொழுது மற்றும் பணம் பரிமாற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக இதை கவனயுங்கள்.

வழிமுறை 3 : உங்களுக்கு நிறைய இலவசம் தருவதாக கூறும் தளங்களை நம்ப வேண்டாம். அவற்றில் பொருள்கள் வாங்குவதை தவிர்க்கலாம்.

வழிமுறை 4:  உங்களுடைய கணிப்பொறியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது உங்களுடைய internet histoy ஐ அளித்து விடவும். வெளி இடங்களில் இன்டர்நெட்டில் உலா வந்தாலும் தவறாமல் அளித்து விடவும்.

வழிமுறை 5: புதிய தளங்களுக்கு செல்லும் பொழுது privacy policy படிக்கவும். சில தளங்கள் தங்களுடைய தகவல்களை மற்ற தளங்களுடன் பகிர்துகொள்வார்கள்.

வழிமுறை 6: உங்கள் கணிப்பொறியில் சிறந்த antivirus program களை நிறுவி internetல் உலா வாருங்கள். இலவசமாக கிடைக்கும் antivirus program களையே பயன்படுத்தாலம். avg, avast போன்ற தரமான antivirus இலவசமாக கிடைகின்றன.

*************************************************************************

Tags: internet security tips, internet ideas, பாதுகாப்பான இணைய உலா வருதல், இணைய தகவல்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...