Showing posts with label பிளாக்கர் தொடங்குவது எப்படி. Show all posts
Showing posts with label பிளாக்கர் தொடங்குவது எப்படி. Show all posts

Monday, September 10, 2012

கூகுளின் புதிய அறிமுகம்: உங்களுடைய ப்ளாக் கை கூகுள் பிளஸ் பக்கத்துடன் இன்னைப்பது எப்படி?

கூகிள் இன்று புதிதாக அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே கூகுள் உங்களுடைய ப்ளாக் கூகுள் பிளஸ் அக்கௌன்ட் உடன் இன்னைதிருபீர்கள். இல்லை என்றாலும் இப்பொழுது இன்னைதுவிடுங்கள்.

Step 1: உங்களுடைய ப்ளாக் பக்கத்தில் google+ என்பதை கிளிக் செயுங்கள் அப்பொழுது வரும் பக்கத்தில் upgrade to google plus என்பதை கிளிக் செயுங்கள்


Step 2: உங்களுடைய ப்ளாக் profile கூகிள் பிளஸ்  profile ஆக மாறுவதற்கு காமிக்கும். அதை ஏற்றுக் கொண்டு கீழே Swith now என்பதி கிளிக் செய்தால் உங்களுடைய ப்ளாக் உங்கள் கூகுள் பிளஸ் அக்கௌன்ட் உடன் இணைந்து விடும்.

Step 3: இப்பொழுது வரும் பக்கத்தில் உங்களுடைய ப்ளாக் அனைத்தும் காட்டப்படும். அதில் தேவையான ப்ளாக் கை இணைத்து கொள்ளுங்கள்.




Step 4: இப்பொழுது கீழே உங்களுடைய கூகிள் பிளஸ் பக்கங்கள் காட்டப்படும் அதில் எது அந்த ப்ளாக் கிற்கு உரிய கூகிள் பிளஸ் பக்கமோ அதை கிளிக் செய்தால் போதும் இப்பொழுது உங்கள் ப்ளாக் உடன் உங்கள் கூகுள் பிளஸ் பக்கம் இன்னைந்துவிடும். உங்களுக்கு ரசிகர் பக்கம் இல்லை என்றால் புதிதாக ரசிகர் பக்கம் உருவாகி இணைத்து கொள்ளுங்கள். அதற்கு கீழேயே create new page என்பதை கிளிக் செய்து உருவாக்குங்கள்


Step 5: உங்களுடைய ப்ளாக் பதிவுகளுக்கு கீழே share என்ற லிங்க் கை கிளிக் செய்து Share செய்வதன் மூலம் உங்களுடைய பதிவுகள் நேரடியாக உங்களுடைய பக்கத்தில் ஷேர் செய்யப்படும்.

உங்களுடைய கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை கீழே பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.. வாசகர் அனைவருக்கும் நன்றி நண்பர்களே............

உங்களுடைய கூகுள் பிளஸ் ரசிகர் பக்கம் வேறொரு அக்கௌன்ட் டில் இருந்தால் எப்படி இணைப்பது என்று அடுத்த பதிவில் பார்போம்.......

பதிவு: கூகுள் பிளஸ் ரசிகர் பக்கத்தை ஒரு accountல் இருந்து மற்றொரு Account இற்கு மாற்றுவது எப்படி?

Wednesday, August 22, 2012

பாடம் 7: கேட்ஜெட் (Gadgets) மற்றும் பிளாக்கர் லேஅவுட் (Layout) பயன்படுத்துவது எப்படி?

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. முந்தய பாடத்தில் ப்ளாக் readers பற்றி பார்த்தோம். இந்த பதிவில் layout டை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்போம். 

முதலில் உங்களுடைய ப்ளாக் கிற்கு செல்லவும். அதில் இடது பக்கத்தில் உள்ள layout என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் வரும். layout ல் மேலே உள்ள பகுதி தலைப்பு பகுதி. கீழே லெப்ட் சைடு உள்ள பகுதி ப்ளாக் போஸ்ட் பகுதி.
கீழே உள்ளது bottom பகுதி. மற்றும் லெப்ட் சைடு பார் உள்ளது இங்கு.

சைடு பார் நம்முடைய தேவைகேற்ப அமைத்து கொள்ளலாம்.


Navbar :

navbar என்பது பிளாக்கர் ரில் மேலே உள்ளது ஆகும். அதில் மாற்றங்கள் செய்ய எடிட் என்பதை கிளிக் செய்யவும். உங்களுடைய navbar எந்த கலரில் தேவை என்பதை தேர்வு செய்யலாம். இல்லை என்றால் navbar off என்பதை தேர்வு செய்தால் அது உங்களுடைய பிளாக்கர் பக்கத்தில் தோன்றாது.

தலைப்பு : (Header ) 

உங்களுடைய வலை பூவின் தலைப்பு மற்றும் அதனுடைய விவரங்களை இங்கே மாற்றலாம். இதை மாற்ற Header என்பதில் எடிட் என்பதை கிளிக் செய்யவும்.

ப்ளாக் போஸ்ட் (Blog Post):

ப்ளாக் போஸ்ட் டில் எடிட் என்பதை கிளிக் செய்து அதில் எப்படி போஸ்ட் தோன்ற வேண்டும். அதனுடைய ஈமெயில் செய்யும் விவரங்கள். கூகிள் ஆட்ஸ் எப்படி தோன்ற வேண்டும். முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தோன்ற வேண்டும் இது போன்ற செட்டிங்க்ஸ் மற்றும் பல செட்டிங்க்ஸ் களை மாற்ற முடியும்.

மேலே உள்ள மூன்று Gadgets களை மட்டும் நீங்கள் நகர்த்த முடியாது மற்ற அணைத்து Gadgets கலையும் நகர்த்த முடியும். உங்கள் மௌஸ் சில் எந்த Gadgets ஐ நகர்த்த வேண்டும் அதை கிளிக் செய்து இழுத்து தேவையான இடத்தில விடுங்கள் மாற்றங்கள் செய்த பின் மறக்காமல் save செய்யுங்கள். 

அடுத்த பதிவில் ஒரு வலை பூவிற்கு தேவையான மிக முக்கியமான Gadgets கள் எவை என்று பார்போம். 

உங்களுடைய சந்தேகங்களை மற்றும் கருத்துகளையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். 

Tuesday, August 21, 2012

பாடம் 6:உங்களுடைய வலைபூவை குறிப்பிட்ட நண்பர்கள் மட்டும் பார்ப்பது எப்படி?

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. இது என்னுடைய அடுத்த பதிவு இதை படிபதற்கு முன்னர் இதற்கு முந்தய பதிவை படித்து விட்டு வாருங்கள். முந்தய பதிவு
பாடம் 5: உங்களின் முதல் வலை பதிவு எழுதுவது எப்படி? 

உங்களுடைய வலைபூ தொடங்கப்படும் பொழுது அது அனைவரும் பார்ப்பது போல் தான் செட்டிங்க்ஸ் ஆனது அமைந்திருக்கும்.

வலை. நீங்கள் ஒரு புதிய வலைப்பதிவை உருவாக்கும் போது இந்த அமைப்பை இயல்பாக செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் நாம் வலை பூ உருவாக்குவது அனைவரும் பார்ப்பதற்கு தான், எனினும் ஒரு சிலர் நண்பர் வட்டதிற்காக வலை பூ உருவாக்குகின்றனர்.

இப்பொழுது உங்களுடைய வலை பூ குறிப்பிட நண்பர்கள் மட்டும் பார்க்கும படி செய்வது எப்படி என்று பார்போம்.

முதலில் உங்களுடைய வலைபூ வில் லாக் இன் செய்து உங்களுடைய செட்டிங்க்ஸ் செய்ய வேண்டிய ப்ளாக் கை ஓபன் செய்யுங்கள்.



அமைப்புகள்> அடிப்படை. "அனுமதிகள்" (settings-> basic-> Permissions ) என்பதற்கு செல்லவும்.

உங்களுடைய பதிவுகள் யாரெல்லாம் எழுதாலாம் என்று நினைகிரீர்களோ அவர்களின் ஈமெயில் ஐ டி யை add authors என்பதை கிளிக் செய்து அங்கே டைப் செய்யவும். டைப் செய்து முடித்ததும் invite authors என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது அவர்கள் மெயிலில் உங்களுடைய லிங்க் கிளிக் செய்யபட்டால் அவர்களும் உங்களுடைய வலை பூவில் பதிவுகள் எழுதி அப்டேட் செய்ய முடியும்.

அதற்கு அடுத்தாக blog readers என்று உள்ளது இதில் தான் நாம் செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்.

அதில் எடிட் என்பதை கிளிக் செய்யவும். மூன்று option கள் இருக்கும்.

any body - யர்ர் வேண்டுமானாலும் படிக்கலாம்

only blog authors - ப்ளாக் authors மட்டும் படிக்கலாம்.

Only these readers - குறிப்பிட நண்பர்கள் மட்டும் படிக்கலாம்.

இதை செலக்ட் செய்து அவர்களுடைய ஈமெயில் ஐ டி யை கீழே உள்ள 
கட்டத்தில் டைப் செய்யவும். இறுதியாக invite readers என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது ஒரு லிங்க் அனைவருடைய மெயில் ஐ டி கும் சென்றிருக்கும். 

அவர்கள் அந்த லிங்க் கை பயன்படுத்தி மூன்று விதமாக உங்களுடைய வலை பூ வில் உள்ள பதிவுகளை படிக்க முடியும்.


அவர்கள் மூன்று விஷயங்கள் ஒன்று செய்ய தூண்டுதல் ஒரு மின்னஞ்சல்:

1. ஏற்கனவே உள்ள Google கணக்கை கொண்டு உங்கள் வலை பூவில் உள்நுழைய வேண்டும்

2. ஒரு புதிய Google கணக்கை (பிளாகரில் உள்நுழைய இது) உருவாக்கி உள்நுழைய வேண்டும்

3. ஒரு விருந்தினராக உங்கள் காண்க.

விருந்தினராக வருபவர்கள் இரண்டு வாரத்திற்கு மேல் நீங்கள் அனுப்பிய லிங்க் வொர்க் ஆகாது. அதற்கு மேல் லும் விருந்தினராக பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் புதிதாக இன்விடே செய்ய வேண்டும்.

Friday, August 17, 2012

பாடம் 5: உங்களின் முதல் வலை பதிவு எழுதுவது எப்படி?

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. கடைசி பதிவில் டஷ்போர்ட் பற்றி பார்த்தோம். முந்தய பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

டஷ்போர்ட் டில் வீவ் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும். அல்லது உங்கள் ப்ளாக் வெப் அட்ரஸ் சை ப்ரௌசெரின் அட்ரஸ் பாரில் டைப் செய்து பார்க்கவும். 
இப்பொழுது உங்கள் வலைப்பூவில் No Post என்று இருக்கும்.

கீழே உள்ள படத்தை கவனிக்கவும்.


டஷ்போர்ட் டில் ஆரஞ்சு நிற பென்சிலை கிளிக் செய்தால் மேலே உள்ளது போல் வரும்.

இதில் post என்ற இடத்திற்கு அடுத்து வரும் இடத்தில உங்களுடைய பதிவின் தலைப்பை டைப் செய்யுங்கள்.

அதற்கு கீழே உள்ள பெரிய பாக்ஸ் இல் உங்களுடைய பதிவுகளை டைப் செயுங்கள்.

உங்களுடைய பதிவு களுக்கு இடையே படங்களை சேர்க்க link என்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள படத்தை கிளிக் செய்து இமேஜ் ஜெய் சேர்க்க முடியும்.

லிங்க் உருவாக்க தேவையான வார்த்தையை செலக்ட் செய்து அடுத்து லிங்க் என்பதை கிளிக் செய்யவும் இப்பொழுது வரும் பாக்ஸ் இல் உங்கள் லிங்க் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.

மேலும் எழுத்தை மாற்ற மேலே உள்ள நார்மல் என்பதை மாற்றி பார்க்கவும் தேவையானதை செலக்ட் செய்து மாற்றி பார்க்கவும்.

வீடியோ சேர்ப்பதற்கு இமேஜ் கு அடுத்து உள்ள படத்தை கிளிக் செய்து வீடியோ அப்லோட் செய்து ஓகே கொடுக்கவும்.

யூடுப் வீடியோ களை ஷேர் செய்யலாம். உங்களுடைய வெப்காம் மில் ரெகார்ட் செய்தும் பதிவேற்றாலம்.

இறுதியாக உங்களுடைய பதிவை புப்ளிஷ் அல்லது save செய்யுங்கள். புப்ளிஷ் செய்தல் பதிவு உங்கள் ப்ளாக் கை பார்த்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நீங்கள் புப்ளிஷ் செய்ததும் இதை கூகிள் பிளஸ் சில் ஷேர் செய்யுங்கள் என்ற விண்டோ ஓபன் ஆகும். உங்களுடைய பதிவு உங்களுடைய பக்கத்தில் சஹர் செய்ய விரும்பினால் ஷேர் பட்டனை கிளிக் செய்யுங்கள் இல்லை என்றால் கான்சல் கிளிக் செய்யுங்கள்.

உங்களுடைய சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நன்றி

Wednesday, August 15, 2012

பாடம் 4: வலைப்பூவின் டாஷ்போர்ட் (Dashboard) பற்றிய தகவல்கள்

உங்களுடைய வலைபூ ஆரம்பமாகிவிட்டது. இப்பொழுது நீங்கள் அதை நிர்வகிப்பது பற்றி பார்போம்.

பிளாக்கர் டஷ்போர்ட் மிக முக்கியமான ஒன்று. இதில் புது ப்ளாக் தொடங்க நீங்கள நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்து முந்தய பதிவை பார்த்து இதில் மற்றொரு ப்ளாக் தொடங்கலாம்.

உங்களுடைய ப்ளாக் வரிசையாக காட்டப்படும். அதில் புதியதாக தொடங்கிய ப்ளாக் மேலே இருக்கும்.

அடுத்ததாக ஆரஞ்சு நிற பட்டன் ஒன்று உள்ளது இது புதிதாக அந்த ப்லாகில் பதிவு எழுத அதை கிளிக் செய்யவும். அடுத்தது ப்லாகில் அணைத்து வசதிகளும் அதில் கொடுகபடிருகும். அதற்கு தனியாக ஒரு பதிவு எழுத வேண்டி இருக்கும். 

இறுதியாக வீவ் ப்ளாக் அது உங்களுடைய வலை பூவை பார்க்க கிளிக் செய்யவும்.

உங்களுடைய ப்லாகில் பதிவுகள் எழுத தொடங்கியதும் அதன் கீழே வரகூடியவை 

• எத்தனை பக்கம் காட்சிகள் உங்கள் தளத்தில் கடந்த வாரத்தில் வந்துள்ளது.
• பதிவுகள் எண்ணிக்கை (வரைவுகளை உட்பட) மற்றும் கடைசி வெளியீட்டு தேதி
• உங்கள் தொடருகிறவர்கள்  மக்கள் எண்ணிக்கை 

எதை பற்றி எழுதபோகிறேர்கள் என்று யோசித்து வையுங்கள் அடுத்த பதிவில் பதிவு எழுதுவது எப்படி என்று பார்போம். 

தொடர்ந்து ஆதரவு அளித்து பின்னோட்டம் கொடுத்து ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு நன்றி


Tuesday, August 14, 2012

பாடம் 3: வலை பூ தொடங்குவது எப்படி வீடியோ தொகுப்பு

வலை தொடங்குவதில் சந்தேகம் இருந்தால் இந்த வீடியோ தொகுப்பை பார்க்கவும். இது மிக எளிமையாக உங்களுக்கு புரியும் எப்படி தொடங்குவது என்று




உங்களுடைய மேலான கருத்துகளை தெரியபடுத்தவும்.




பாடம் 2: வலை பூவில் உங்களுக்கான ப்ளாக் தொடங்குவது எப்படி

முதல் பதிவே அதிகமான வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இரண்டாவது பதிவை எழுதுகிறேன். உங்களுடைய கருத்துகளை தவறாமல் தெரியபடுத்துங்கள்.

முந்தய பதிவை படிக்க இங்கு சொடுக்கவும். 

முதலில் உங்களுடைய வலைபூவிற்கான பெயரை தேர்வு செய்துவிட்டீர்களா. அந்த பெயர் யாரும் பயன்படுததாக இருக்கவேண்டும்.

அடுத்து பிளாக்கர் தளத்தில் உள் நுழைத்தும் முந்தய பதிவில் காட்டியது போல்  அதில் நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது கீழே காட்டியது போல் வரும். அதில் 

டைட்டில் (TITLE)

அதில் டைட்டில் (title ) என்ற இடத்தில உங்களுடைய வலைபூவிற்கு உரிய தலைப்பு வையுங்கள். தலைப்பு எதுவானாலும் இருக்கலாம் ஆனால் சற்று பொருத்தமாக வையுங்கள்.

அட்ரஸ் (ADDRESS)

அடுத்தது அட்ரஸ்( address) அதில் உங்கள் வலை பூவிற்கு சரியான எளிமையான அட்ரஸ் கொடுங்கள். 

அட்ரஸ் எளிமையாக இருந்தால் தான் வாசகர்கள் மனதில் நிறுத்த உதவும்.


மேலே காட்டியது போல் வலை பூ வின் அட்ரஸ் இருக்கும். நீங்கள் வைக்கும் பெயரோடு blogspot என்ற பின் ஒட்டு இருக்கும். 

உங்களுடைய அட்ரஸ் சை அதில் டைப் செய்யும் பொழுது அது வேறு யாரும் பயன்படுததாக இருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளும். அது வரை மாற்றி மாற்றி முயற்சிக்கவும்.

டெம்ப்ளேட் (TEMPLATE)

அடுத்தது டெம்ப்ளேட் இங்கு உங்களுடைய வலைத்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அதில் உங்களுக்கு பிடித்த டேம்லேட் டை கிளிக் செய்யவும் .
இறுதியாக (create blog) கிரியேட் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும் சில நொடிகளில் உங்களுடைய வலை பூ உருவாகிவிடும்.

உங்களுக்கு மேலும் சந்தேகம் இருப்பின் இந்த வீடியோ இணைப்பை பார்க்கவும்

Monday, August 13, 2012

பாடம் 1: வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ?

(Blogger) ப்ளாக்கின் மூலம் நீங்கள் எளிதாக ஒரு உங்கள் எண்ணங்கள் வெளியிட ஒரு இலவச வலை சார்ந்த கருவியாகும்.

இதை வெப்ப்ளாக் (weblog) என்று அழைக்கப்படும் இலவச சேவை ஆகும். ப்ளாக் மூலம் நீங்கள் உங்களுடிய கருத்துகளை வெளியிடமுடியும். இந்த சேவை முற்றிலும் இல்லவசமான சேவை. பலவிதமான ப்ளாக் இலவச சேவை அளித்தாலும் அதில் அதிகமா பயன்பதுடுவது கூகுளின் பிளாக்கர் மற்றும் வோர்ட்ப்றேச்ஸ் தளமும்.

நாம் இந்த பதிவுகளின் தொடரில் பார்க்க இருப்பது பிளாக்கர் பற்றியது.

பிளாக்கர் சிறப்பு அம்சங்கள்:

இது முற்றிலும் இலவசம்.

வெறும் கணினி அறிவு மட்டும் இருந்தால் போதும் உங்களுக்கு என்று ஒரு வலைப்பூவை நீங்கள் உருவாக்கலாம்.

வெப்சைட் பயன்படுத்த உங்களுக்கு வெப் டிசைன் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வலைபூ பயன்படுத்த அது தேவை இல்லை.

 இது பயன்படுத்த நம்பமுடியாத அளவிற்கு எளிது!

 இது எளிதாக போன்ற Picasa, யூ டியூப், கூகுள் போன்ற பிற Google சேவைகள், உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் பதிவுகளை நீங்கள் மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் வெளியிடலாம் அல்லது உங்கள் மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்

ப்ளாக் தொடங்குவது எப்படி
சரி நாம் தொடங்குவது பற்றி பார்போம். ப்ளாக் தொடங்க உங்களுக்கு கூகிள் அக்கௌன்ட் இருந்தால் போதும். இப்பொழுது கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பிளாக்கர் வெப்சைட் கு செல்லுங்கள்.




அங்கே கூகிள் அக்கௌன்ட் மூலம் லாகின் செயயுங்கள். கூகிள் அக்கௌன்ட் என்றால் யூ டியுப், ஜிமெயில், கூகிள் பிளஸ் எதாவது ஒன்றில் உங்களுக்கு அக்கௌன்ட் இருந்தால் அதை கொண்டு லோக் இன் செய்யுங்கள். இல்லை என்றால் sign up பட்டன் னை கிளிக் செய்து உங்களுக்கு என்று ஒரு அக்கௌன்ட் டை உருவாக்குங்கள்.

அடுத்த பதிவில் உங்களுக்கென்று ஒரு வலை பூவை உருவாகுவது எப்படி என்று பார்போம். தொடந்து காத்திருங்கள்.

உங்கள் பக்கத்திற்கான பெயரை தேர்வு செய்து வைத்திருங்கள்.


வலைப் பூ (பிளாக்) என்றால் என்ன?

ஒரு வலை பூவில் நீங்கள் எழுதும் ஒரு பதிவு வலை பதிவு.வலை பதிவு என்பது இணையத்தின் மூலம் உங்களுடைய கருத்துகளை உங்களுக்கென்று ஒரு பக்கத்தில் தெரிவிப்பது. மற்றும் உங்களுக்கு தெரிந்த பல தொழில்நுட்பங்களை கற்றுகொடுக்கலாம் அறிவு சம்பந்தமாக நீங்கள் அறிந்தவற்றை உங்களுடைய பகத்தின் மூலம் தெரியபடுதலாம்.

இதற்கு மொழி ஒரு தடையல்ல. புத்தகத்தில் எழுதுவது போல வலைப்பூவில் உங்களுடைய கருத்துகளை நீங்கள் எழுதலாம். இணையம் மூலம் அனைவரும் உங்களுடைய கருத்துகள், கவிதைகள், கதைகள், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் களை படிக்க அவர்களுக்கு உதவியை இருக்கும்.



வலைபதிவு 
வலைபதிவு என்பது உங்களுடைய வலை பூவில் உங்களுடைய பதிவுகள் பதிப்பது. பலவகையான வலை பூக்கள் இல்லவசமாக கிடைகின்றன. அதிலும் குறிப்பாக பிளாக்கர் கூகுளின் வலை பூ அதிகமா பயன்படுத்தபடுகிறது.

இது என்னுடைய முதல் தொழிநுட்ப பதிவு தொடர்ந்து வலை பூ பயன்படுத்துவது பற்றி எழுத உள்ளேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியபடுத்தவும். மேலும் உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியபடுத்துங்கள்.

(நீங்கள் படித்துக்கொண்டிருப்பதும் ஒரு வலைப்பதிவுதான். ).
Related Posts Plugin for WordPress, Blogger...