Tuesday, August 14, 2012

பாடம் 2: வலை பூவில் உங்களுக்கான ப்ளாக் தொடங்குவது எப்படி

முதல் பதிவே அதிகமான வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இரண்டாவது பதிவை எழுதுகிறேன். உங்களுடைய கருத்துகளை தவறாமல் தெரியபடுத்துங்கள்.

முந்தய பதிவை படிக்க இங்கு சொடுக்கவும். 

முதலில் உங்களுடைய வலைபூவிற்கான பெயரை தேர்வு செய்துவிட்டீர்களா. அந்த பெயர் யாரும் பயன்படுததாக இருக்கவேண்டும்.

அடுத்து பிளாக்கர் தளத்தில் உள் நுழைத்தும் முந்தய பதிவில் காட்டியது போல்  அதில் நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது கீழே காட்டியது போல் வரும். அதில் 

டைட்டில் (TITLE)

அதில் டைட்டில் (title ) என்ற இடத்தில உங்களுடைய வலைபூவிற்கு உரிய தலைப்பு வையுங்கள். தலைப்பு எதுவானாலும் இருக்கலாம் ஆனால் சற்று பொருத்தமாக வையுங்கள்.

அட்ரஸ் (ADDRESS)

அடுத்தது அட்ரஸ்( address) அதில் உங்கள் வலை பூவிற்கு சரியான எளிமையான அட்ரஸ் கொடுங்கள். 

அட்ரஸ் எளிமையாக இருந்தால் தான் வாசகர்கள் மனதில் நிறுத்த உதவும்.


மேலே காட்டியது போல் வலை பூ வின் அட்ரஸ் இருக்கும். நீங்கள் வைக்கும் பெயரோடு blogspot என்ற பின் ஒட்டு இருக்கும். 

உங்களுடைய அட்ரஸ் சை அதில் டைப் செய்யும் பொழுது அது வேறு யாரும் பயன்படுததாக இருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளும். அது வரை மாற்றி மாற்றி முயற்சிக்கவும்.

டெம்ப்ளேட் (TEMPLATE)

அடுத்தது டெம்ப்ளேட் இங்கு உங்களுடைய வலைத்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அதில் உங்களுக்கு பிடித்த டேம்லேட் டை கிளிக் செய்யவும் .
இறுதியாக (create blog) கிரியேட் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும் சில நொடிகளில் உங்களுடைய வலை பூ உருவாகிவிடும்.

உங்களுக்கு மேலும் சந்தேகம் இருப்பின் இந்த வீடியோ இணைப்பை பார்க்கவும்

1 comment:

  1. புதியவர்களுக்கு மிகவும் பயன் தரும்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...