Sunday, September 16, 2012

கணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான 4 செயல்கள்

உங்களுடைய கணினியை நீங்கள் மற்றவர்க்கு விற்கும் பொழுது செய்ய வேண்டிய முக்கியமான 4 செயல்களை பற்றி பார்போம். அதற்கு முன்னர் ஏன் செய்ய வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன்.

உங்களுடைய கணினியில் உங்களுடைய பல சொந்த தங்கவல்கள் பதிந்து வைத்திருப்பீர்கள், உங்களுடைய account password கூட பதிந்து வைத்திருக்கலாம், இது போன்ற நிறைய உங்கள் சொந்த தகவல்கள் அதில் இருக்கலாம் அதனால் முக்கியமாக இதை செய்யுங்கள்.



Backup
நீங்கள் கேட்கலாம் நாங்கள் விற்கும் பொழுது Backup எடுத்து விட்டு தானே விற்க போறோம் என்று, நீங்கள் உங்களுடைய தகவல் களை மட்டும் Backup செய்வீர்கள், அதற்கு பதிலாக உங்களுடைய முழு disk கையும் image Backup எடுத்துகொல்லுங்கள். இது உங்களுடைய புக்மார்க் மற்றும் சில சாப்ட்வேர் செட்டிங்க்ஸ் களை செய்வதற்கு உதவும்.

Secure Format:
உங்களுடைய கணிணியை பார்மட் செய்து விடுங்கள், நீங்கள் உங்களுடைய தகவல்களை அழித்திருந்தாலும் அவற்றை Recovery Software மூலம் எடுத்து விட முடியும் அதனால் உங்களுடைய கணிணியை Format செய்து விடுங்கள்.

De-authorise
உங்களுடைய Smart phone மற்றும் computer ரை ஒரு சில அக்கௌன்ட் உடன் இனைதிருபீர்கள், அதை  De-authorise செய்து விடுங்கள், ஏன் எனில் அவற்றின் மூலம் உங்கள் அக்கௌன்ட் குள் செல்ல வழி உள்ளது.

Saved Password in Smart Phone:
ஸ்மார்ட் போன் களில் உள்ள பதிந்து வைத்துள்ள அணைத்து தகவல்களையும் மறக்காமல் அழித்துவிடுங்கள், ஸ்மார்ட் போன் களில் உள்ள தகவலகலையும் Backup செய்துகொள்ளுங்கள். முக்கியமாக personal video களை அளித்து விடவும். 

இதற்கு மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

Thursday, September 13, 2012

கூகுள் பிளஸ் ரசிகர் பக்கத்தை ஒரு accountல் இருந்து மற்றொரு Account இற்கு மாற்றுவது எப்படி?

கூகுள் புதிதாக உங்கள் ப்லொக்கில் இருந்து கொண்டே உங்கள் ரசிகர் பக்கத்தில் உங்களுடைய பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் புதிய முறையை அறிமுகபடுதிள்ளது. அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால் இந்த பதிவை படிக்கவும்.


இந்த முறை அறிமுகபடுதியதும் உங்கள் ரசிகர் பக்கம் வேறு ஒரு அக்கௌண்டில் இருந்தால் அதை எப்படி இன்னைப்பது என்று பார்க்க தான் இந்த பதிவு. 

முதலில் உங்களுடைய கூகுள் பிளஸ் ரசிகர் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். ரசிகர் பக்கத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே வலது புறம் உள்ளம் settings என்பதை கிளிக் செய்யவும்.

செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்ததும் google + settings , Manager என்று இரண்டு option கள் வரும் அதில் Manager என்பதை கிளிக் செய்யவும். 

இப்பொழுது வரும் பக்கத்தில் add managers by email என்ற இடத்தில உங்களுடைய ப்ளாக் இருக்கும் ஈமெயில் ஐ கொடுத்து invite என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் ஜிமெயில் ஐ ஓபன் செய்து அதை அங்கு வந்துள்ள mail ஐ கிளிக் செய்து confirm செயுங்கள். இப்பொழுது இந்த ரசிகர் பக்கம் உங்களுடைய ப்ளாக் உள்ள ஈமெயில் உடன் இனைந்துவிடும்.

இரண்டு வாரம் நீங்கள் manager ஆக தொடர்ந்தாள் உங்களுடைய ரசிகர் பக்கத்தை transfer செய்து கொள்ளலாம்.

Windows 8 அக்டோபர் 26 சந்தைக்கு வருகிறது



மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Windows 8 பதிப்பை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் மேசை கணினியை விட கையடக்க கணினி பயன்பாடு அதிகமா இருக்கும் என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அணைத்து சாதனங்களும் பயன்படுத்தும் வகையில் மிக எளிமையான Windows 8 பதிப்பை வெளியிட உள்ளது.

Windows 95 அறிமுகம் செய்ததில் இருந்து இன்று வரை வளர்ந்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் Windows 8 பதிப்பை வெளியிடுவதன் மூலம் மேலும் ஒரு புதுமையான உலகிற்கு நம்மை எல்லாம் அழைத்து செல்லும் என்று நம்பலாம்.

Steven Sinofsky, president of Microsoft's Windows அவர்கள் ஏற்கனவே Windows 8 அக்டோபர் மாதம் வெளிவருகிறது என்று அறிவித்திருந்தார். தற்பொழுது Windows 8 வெளியிடும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Windows 8 அக்டோபர் மாதம் 26 தேதி அன்று சந்தையில் விற்பனைக்கு வருகிறது.  கைக் கணினிகளின் சிறு சாதனங்கள் வழியாக எண்ணற்ற பயன்பாடுகளை எளிமையாக்க Windows 8 மிகச் சிறந்த தொகுப்பாக அமையும் என்று எதிர்பார்கலாம்.

இதன் முந்தய பதிப்பான Windows 7 இதுவரை 70 கோடி வரை விற்பனையாகியுள்ளது. காத்திருங்கள் Windows 8 பதிப்பை பெற அக்டோபர் 26 வரை.

Wednesday, September 12, 2012

பாதுகாப்பாக internetல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6


வழிமுறை 1: எப்பொழுதும் உங்களுடைய address bar ல் spelling சரியாக உள்ளதா என்று பார்க்கவும். ஒரு எழுத்து மாறினாலும் வேறு தளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அங்கு உங்களுடைய தகவல்களை பறிமாறினால் அது திருடப்படலாம்.

வழிமுறை 2 :  உங்களுடைய அட்ரஸ் பார் padlock ஆனது http என்பதற்கு பதிலாக https: என்று இருக்க வேண்டும். https என்று இருந்தால் உங்களுடைய தகவல்களை திருடினாலும் படிக்க முடியாத அளவில் இருக்கும். இதை ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் பொழுது மற்றும் பணம் பரிமாற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக இதை கவனயுங்கள்.

வழிமுறை 3 : உங்களுக்கு நிறைய இலவசம் தருவதாக கூறும் தளங்களை நம்ப வேண்டாம். அவற்றில் பொருள்கள் வாங்குவதை தவிர்க்கலாம்.

வழிமுறை 4:  உங்களுடைய கணிப்பொறியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது உங்களுடைய internet histoy ஐ அளித்து விடவும். வெளி இடங்களில் இன்டர்நெட்டில் உலா வந்தாலும் தவறாமல் அளித்து விடவும்.

வழிமுறை 5: புதிய தளங்களுக்கு செல்லும் பொழுது privacy policy படிக்கவும். சில தளங்கள் தங்களுடைய தகவல்களை மற்ற தளங்களுடன் பகிர்துகொள்வார்கள்.

வழிமுறை 6: உங்கள் கணிப்பொறியில் சிறந்த antivirus program களை நிறுவி internetல் உலா வாருங்கள். இலவசமாக கிடைக்கும் antivirus program களையே பயன்படுத்தாலம். avg, avast போன்ற தரமான antivirus இலவசமாக கிடைகின்றன.

*************************************************************************

Tags: internet security tips, internet ideas, பாதுகாப்பான இணைய உலா வருதல், இணைய தகவல்.

Monday, September 10, 2012

கூகுளின் புதிய அறிமுகம்: உங்களுடைய ப்ளாக் கை கூகுள் பிளஸ் பக்கத்துடன் இன்னைப்பது எப்படி?

கூகிள் இன்று புதிதாக அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே கூகுள் உங்களுடைய ப்ளாக் கூகுள் பிளஸ் அக்கௌன்ட் உடன் இன்னைதிருபீர்கள். இல்லை என்றாலும் இப்பொழுது இன்னைதுவிடுங்கள்.

Step 1: உங்களுடைய ப்ளாக் பக்கத்தில் google+ என்பதை கிளிக் செயுங்கள் அப்பொழுது வரும் பக்கத்தில் upgrade to google plus என்பதை கிளிக் செயுங்கள்


Step 2: உங்களுடைய ப்ளாக் profile கூகிள் பிளஸ்  profile ஆக மாறுவதற்கு காமிக்கும். அதை ஏற்றுக் கொண்டு கீழே Swith now என்பதி கிளிக் செய்தால் உங்களுடைய ப்ளாக் உங்கள் கூகுள் பிளஸ் அக்கௌன்ட் உடன் இணைந்து விடும்.

Step 3: இப்பொழுது வரும் பக்கத்தில் உங்களுடைய ப்ளாக் அனைத்தும் காட்டப்படும். அதில் தேவையான ப்ளாக் கை இணைத்து கொள்ளுங்கள்.




Step 4: இப்பொழுது கீழே உங்களுடைய கூகிள் பிளஸ் பக்கங்கள் காட்டப்படும் அதில் எது அந்த ப்ளாக் கிற்கு உரிய கூகிள் பிளஸ் பக்கமோ அதை கிளிக் செய்தால் போதும் இப்பொழுது உங்கள் ப்ளாக் உடன் உங்கள் கூகுள் பிளஸ் பக்கம் இன்னைந்துவிடும். உங்களுக்கு ரசிகர் பக்கம் இல்லை என்றால் புதிதாக ரசிகர் பக்கம் உருவாகி இணைத்து கொள்ளுங்கள். அதற்கு கீழேயே create new page என்பதை கிளிக் செய்து உருவாக்குங்கள்


Step 5: உங்களுடைய ப்ளாக் பதிவுகளுக்கு கீழே share என்ற லிங்க் கை கிளிக் செய்து Share செய்வதன் மூலம் உங்களுடைய பதிவுகள் நேரடியாக உங்களுடைய பக்கத்தில் ஷேர் செய்யப்படும்.

உங்களுடைய கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை கீழே பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.. வாசகர் அனைவருக்கும் நன்றி நண்பர்களே............

உங்களுடைய கூகுள் பிளஸ் ரசிகர் பக்கம் வேறொரு அக்கௌன்ட் டில் இருந்தால் எப்படி இணைப்பது என்று அடுத்த பதிவில் பார்போம்.......

பதிவு: கூகுள் பிளஸ் ரசிகர் பக்கத்தை ஒரு accountல் இருந்து மற்றொரு Account இற்கு மாற்றுவது எப்படி?

Sunday, September 9, 2012

ப்ளாக்கில் புத்தகங்களை படிக்கும் வண்ணம் இனைப்பது எப்படி?

தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. ப்ளாக்கில் புத்தகங்களை படிக்கும் வண்ணம்  இனைப்பது எப்படி? என்று இந்த பதிவில் எழுத உள்ளேன்.

Demo பார்க்க 

Step 1: முதலில் இந்த http://www.scribd.com லிங்க் கிளிக் செய்து ஓபன் செயுங்கள்.

Step 2: அதில் உங்களுக்கென்று ஒரு அக்கௌன்ட் ஓபன் செயுங்கள்.


Step 3: அக்கௌன்ட் ஏற்கனவே இருந்தால் log in செயுங்கள்.  இப்பொழுது வரும் பக்கத்தில் upload என்பதை கிளிக் செய்யவும்.


Step 4: upload என்பதை கிளிக் செய்து உங்களுடைய file ஐ அப்லோட் செயுங்கள். உங்களுடைய file pdf ஆக இருக்க வேண்டும். உங்களுடைய பதிவு Search engine தேட கூடாது என்றால் Make this document Private என்பதை செலக்ட் செய்யவும். 


Step 5: இப்பொழுது அதில் வரும் செட்டிங்க்ஸ் செய்து Save செய்யவும்.  உங்களுக்கு என்று ஒரு லிங்க் கொடுக்கப்படும் அந்த லிங்க் கை டவுன்லோட் லிங்க் காக கொடுக்கவும்.

Step 6: உங்களுடைய file லிங்க் காக கொடுக்கப்பட்ட லிங்க் கை ஓபன் செய்யவும். அதில் மேலே embed என்பதை கிளிக் செய்து வரும் Html code ஐ copy செய்யவும்.


Step 7 பதிவு எழுதும் பொழுது அந்த pdf book தோன்ற வேண்டிய இடத்தில உங்களுடைய ப்ளாக் கில் Html என்பதை கிளிக் செய்து அதை Paste செய்து compose என்பதை கிளிக் செய்து பப்ளிஷ் செய்யவும்.


*************************************************************************
Tags: ப்ளாக் டிப்ஸ், ப்ளாக் pathivukal blog ideas, blog thagavalkal, ப்ளாக் கில் pdf பதிவேற்றும் தகவல், ப்ளாக் புத்தகம், 

Tuesday, September 4, 2012

கூகிள் பிளஸ் (google plus) ரசிகர் பக்கத்தில் தொடருபவர்கள் விட்ஜெட் டை ப்ளாக்கில் இணைப்பது எப்படி?

பேஸ்புக் சமுக வலைதளம் ரசிகர் பக்கத்திற்கான  விட்ஜெட் டை ப்ளாக்கில் இன்னைதிருபீர்கள். ஆனால் தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் கூகிள் பிளஸ் follower  விட்ஜெட் டை ப்ளாக்கில் இணைப்பது எப்படி என்று பார்போம். 

Step 1: முதலில் உங்களுடைய கூகிள் பிளஸ் பக்கத்தை திறந்துகொல்லுங்கள்.

Step 2: வலது புறம உள்ள செட்டிங்க்ஸ் பட்டன் னை கிளிக் செய்யவும். அதில் Get Started என்பதை கிளிக் செய்யவும். 


Step 3: இப்பொழுது வரும் பக்கத்தில் get the batch என்பதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்ததும் தனியாக புதிய விண்டோ வில் ஓபன் ஆகும். 

அல்லது இந்த லிங்க் கை கிளிக் செய்யவும். https://developers.google.com/+/plugins/badge/


Step 4:  உங்களுக்கு தேவையான settings செய்து கொள்ளுங்கள் preview வலது பக்கத்தில் தோன்றும்.


Step 5: இப்பொழுது வலது பக்கத்தில் வரும் code முழுவதையும் copy செய்து கொள்ளுங்கள். copy செய்ததை உங்களுடைய ப்ளாக் கில் சென்று 

Layout --> Add gadget--> Html/ java script என்பதை கிளிக் செய்து அங்கே code paste செய்து save செய்யவும். இப்பொழுது அது எந்த இடத்தில் தோன்ற வேண்டுமோ அங்கே நகர்த்தி save செய்யவும்.

********************************************************************
Tags: கூகிள் பிளஸ், கூகிள் பிளஸ் ரசிகர் பக்கம், கூகிள் பிளஸ் விட்ஜெட், ப்ளாக் டுடோரியல், ப்ளாக் டிப்ஸ் 
Related Posts Plugin for WordPress, Blogger...